திமுக கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள்... உயிரை கையில் பிடித்து அலறிய திக்..திக் சம்பவம்..!
துரத்தி வந்த இளைஞர்கள் 8 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே காரில் பயணித்த பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது சின்னி தில்லாங் என்பவர் கானத்தூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பெண்கள் பயணித்த காரை வழிமறித்து, கதவை தட்டி மிரட்டிய கும்பலால் காரில் இருந்த பெண்கள் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் காரில் பயணித்த பெண்களை மற்றொரு காரில் துரத்தியை எட்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். சொகுசு காரில் குடும்பத்துடன் பயணித்த பெண்களை திமுக கொடி கட்டிய மற்றொரு காரில் இருந்த எட்டு இளைஞர்கள் தொடர்ந்து பின் சென்று துரத்திய விவகார தொடர்பாக காரில் இருந்த இளைஞர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையத்திற்கு உட்பட்ட பகுதி இது.
கடந்த 26ஆம் தேதி இரவு ஈசிஆர், முட்டுக்காடு பாலம் அருகே தனது குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தபோது சபாரி காரிலும், கருப்பு நிற தார் காரிலும் வந்த இளைஞர்கள் தன்னை கேலி செய்யும் விதமாகவும், தன் காரை முன் சென்று குறுக்கே நிறுத்தி மிரட்டியதாகவும், தங்கள் காரை நிறுத்திய போது அந்த இளைஞர்கள் இறங்கி வந்து தங்களிடம் விவகாரம் செய்ததாகவும், பின்னர் தங்கள் காரின் பின்னால் வந்த வீடு வரை பின் தொடர்ந்து வந்து துன்புறுத்தியதாகவும் அந்தப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரியின் பேரில் வீடியோ காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்த எட்டு இளைஞர்களை தேடி வருகிறார்கள். அந்த சஃபாரி காரில் திமுக கொடி கட்டி இருந்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது. புகார் அளித்த பெண் பயணித்த காரில் மூன்று பெண்கள் ஒரு ஆண் ஒரு கைக்குழந்தை இருந்ததாக தெரிவித்துள்ளனர். துரத்தி வந்த இளைஞர்கள் 8 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செல்வப் பெருந்தகைக்கு செக் வைக்கும் திமுக தலைமை...டி.கே.சிவகுமார் மூலம் ராகுலுடன் பேச்சு...
உயிரை கையில் பிடித்து அலறிய திக்..திக் சம்பவம்..!
ஆனால் அந்த இளைஞர்கள் சென்ற காரை உரசி விட்டு மன்னிப்பு கேட்காமல் சென்றதால் துரத்திச் சென்றதாக அந்தப்பெண்ணின் மீது காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
திமுக கொடி கட்டிய காரில் இளைஞர் சென்று மிரட்டிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக ஐடிவிங் தனது எக்ஸ் தளப்பதிவில், ''சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!
ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில், சட்டம் இருக்கிறதா? காவல்துறை இருக்கிறதா? திமுக கொடியோடு, இப்படியொரு பதைக்க வைக்கும் குற்றத்தை செய்பவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறை, "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச் சொன்னது" என்று காரில் சென்ற பெண்களைப் பார்த்து கேட்டதாக அவர்கள் கூறுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் பொறுக்கிகளின் பின்னணியில் திமுக அடையாளம் இருப்பதும், காவல் துறை மவுனம் காப்பதும் தொடர்வது வெட்கக்கேடு! இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதியப்படுமா? பதியப்பட்டாலும் பெயர் வெளியில் லீக் ஆகாமல் இருக்குமா? இந்த பொறுக்கிகளுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் மு.க.ஸ்டாலின்? ஆதரவாளர்களா? அனுதாபிகளா?'' என கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அரசுப் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சம் ஆக அதிகரிப்பு