''கட்சத்தீவை மீட்கவேண்டும் என்பது திமுகவுக்கு முன்பே எங்கள் நிலைப்பாடு. முதலமைச்சர் தயவு செய்து எங்களுக்கு,பிரதமர் நரேந்திர மோடிக்கு பாடம் எடுக்க வேண்டாம்'' என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசி அண்ணாமலை, ''ஃபிரீடம் ஸ்கொயர் என்று சொல்லப்படுகின்ற கொழும்பு மாநகரத்தில், இலங்கைக்கு எங்கே விடுதலை அறிவிக்கப்பட்டதோ அந்த ஃப்ரீடம் ஸ்கொயரில் முதன்முதலாக மற்றொரு நாட்டினுடைய பிரதமருக்கு முக்கியத்துவம் கொடுத்து முஇகப்பெரிய உயரிய விருது கொடுத்துள்ளனர். நம்முடைய இந்தியா, இலங்கைக்கு எவ்வளவு நெருங்கிய ஒரு நாடாக இருக்கிறது, தொப்புள்கொடி உறவாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

பிரதமர், இலங்கை அதிபரை சந்திக்கும்போது அங்கே இருக்கக்கூடிய எல்லா மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் பிடிக்கப்பட்ட எல்லா படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாக நம்முடைய பிரதமர் ஆன் தி ரெகார்டடாக சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகள் யார்..? திமுக கூட்டணிக் கட்சிகளை சாடினாரா துரைமுருகன்..? வலுக்கும் கண்டனம்..!
முதலமைச்சர் நல்லா புரிஞ்சுக்கணும். இலங்கையில ஒரு சட்டம் இருக்கு. அந்த சட்டத்தின் அடிப்படையில் நம்முடைய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நம்முடைய பிரதமர் பேச்சுவார்த்தையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். படகுகளை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். என்ன பேசப்படுகிறது என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். முக்கியமான நாடு பொருளாதாரத்தில் மிக முன்பு சென்று கொண்டிருக்கக் கூடிய நாடு இந்திய நாட்டின் பிரதமர் சொல்வதற்கு நிச்சயமாக இலங்கை அதிபர் செவி சாய்ப்பார். இவ்வளவு பேச்சுவார்த்தை நடந்திருக்கு. வெளிப்படையாக பிரதமர் பேசியிருக்கிறார். இது தெரியாமல் சட்டமன்றத்தில் ஸ்டாலின் பொய் பேசிக் க்ொண்டிருக்கிறார்.

கட்சத்தீவை மீட்கவேண்டும் என்பது திமுகவுக்கு முன்பே எங்கள் நிலைப்பாடு. முதலமைச்சர் தயவு செய்து எங்களுக்கு,பிரதமர் நரேந்திர மோடிக்கு பாடம் எடுக்க வேண்டாம். கட்சத்தீவை மீட்க முடியாதா என பேசுகிறார்கள். வெளிப்படையாக என்ன சொல்ல வேண்டுமோ பிரதமர் சொல்லி இருக்கிறார்.
களத்தில் இருந்து போராட போகிறேன் என்னுடைய நேரம் முழுவதுமே களத்தில் இருக்க போகுது. மக்களோடு மக்களாக இன்னும் அதிக பணிகளை செய்யப்போகிறேன். மாநிலத் தலைவர் என்கிற நிலையில் இப்போது இருக்கிற பணிகள் இருக்காது. தொண்டனாக இருந்தாலும் அவர்களோடு சேர்ந்து அந்தப்பணிகளை செய்ய முடியும். தலைவர் பதவி இருக்கிறதனால ஒருவர் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியம் யாருக்குமே இங்கே இல்லை.

பதவிகள் வரும் பதவிகள் போகும். ஆனால், எல்லோருமே இன்னும் சுறுசுறுப்பாக, வேகமாக, வீரியமாக களத்தில் போராட வேண்டும். பாரதி ஜனதா கட்சியினுடைய தொண்டர்கள் எல்லோரும் இந்த நேரத்தில் திமுகவின் ஊழலை இன்னும் வீரியமாக வேகமாக சொல்லத்தான் போறோம். ஒரு சித்தாந்தத்தை பார்த்து அரசியலுக்கு வரவில்லை. எல்லோருக்குமே தெரியும் நரேந்திர மோடி என்கின்ற ஒற்றை மனிதனுக்காக அரசியல் களத்தில் வந்தவன் நான்.

ஒரு உறுப்பினராக சேர்ந்து, கிளை தலைவராக இருந்து வரவில்லை. பிரதமர் மோடி கண்ணை மூடிக்கொண்டு குதிக்கச் சொன்னால் குதிப்பேன். அவர் சொல்வதை செயல்படுத்துவது மட்டும்தான் என்னுடைய வேலை. தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஒரு நேர்கோட்டு பயணத்தில் செல்கிறேன். எனது பேச்சும் சீமானின் பேச்சும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆகையால் அவரை பாராட்டினேன். இன்னைக்கு இந்த மேடை அரசியல் கலக்காத ஒரு மேடை. குறிப்பாக அடுத்த இளம் பேச்சாளர்களை கண்டெடுக்க வேண்டிய மேடை. அதில், அண்ணன் சீமானோடு மிக முக்கியமாக பாரிவேந்தர் ஐயாவோடு பங்கேற்று உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தைத் தவிர்த்தால் தமிழகத்தில் இடமே இல்லை.. பிரதமர் மோடியை எச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின்!