ஒருசில திருமணங்கள் மணவறை வந்து இறுதியில் அது நடைபெறாமல் போவதற்கு மணமக்கள், உறவினர்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால், சகோதரிகள் இருவரின் திருமணம் சேற்றால் நின்று போன விநோதம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கர்னாவால் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது ஒரு மகள்களுக்கும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே மண்டபத்தில் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். அதற்காக தேடி அலைந்து மணமகன்களையும் பிடித்துள்ளார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண தேதி குறிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. திருமண நாளும் வந்தது. மணபெண்கள் இருவரும் அலங்காரம் செய்வதற்காக காரில் பியூட்டி பார்லர் சென்றுள்ளனர். மேக்கப் போட்டுவிட்டு இருவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். அங்கு தான் டிவிஸ்டே ஆரம்பமானது.
மணபெண்கள் வந்த கார் முன்னாள் 3பேர் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்த 3பேரும் கீழே விழுந்துள்ளனர்.
இதையும் படிங்க: போர் எதிரொலி...ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்தது இந்தியா!

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் காரை மடக்கி பிடித்துள்ளனர். கார் கதவை திறந்தவர்கள் அதில் இருந்த மணப்பெண்களை வெளியே இழுத்து சண்டை போட்டுள்ளனர். இந்த சண்டை எல்லை மீறியதால் ஆத்திரமடைந்த அந்த 3பேரும் சேற்றை வாரி மணக்கோலத்தில் இருந்த பெண்கள் மீது வீசியுள்ளனர். இதனால் சகோதரிகள் அதிர்ச்சி அடைய அந்த நேரம் மணப்பெண்களின் உறவினர்கள் அங்கு வந்துள்ளனர்.

அவர்கள் அந்த இளைஞர்களை தாக்க, பதிலுக்கு இளைஞர்களின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் தாக்கினர். இருதரப்பும் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ள மணப்பெண் வீட்டாருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதையெல்லாம் ஓரமாக நின்று வேடிக்கப்பார்த்த இரு மணமகன்களும் விட்டாம் போதும்டா சாமி இந்த குடும்பமே வேண்டாம் என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
அதற்குள் அங்கு போலீஸும் வந்துள்ளனர். அவர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் அந்த பெண்களை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்ற மணமகன்கள் நடையை கட்டினர். பிரமாண்டமாக பணம் செலவு செய்து ஆசையாக நடக்க இருந்த திருமணம் சின்ன பைக் விபத்தில் பாதியில் நின்றது.
இதையும் படிங்க: ICC championship: கிங் கோலி ரிட்டர்ன்ஸ்.. பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்.. மாஸ் காட்டிய இந்திய அணி.!