தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து முரண்பாடு இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் காலியாக இருந்த துணைவேந்தர் பதவிகளை நிரப்ப தமிழக அரசு, துணை வேந்தர் தேடுதல் குழுவை அமைத்தது. ஆனால் இந்த குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவை சேர்ந்த உறுப்பினர்களை தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.

இதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சட்டசபையில் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்கள் கிடப்பில் வைத்து இருந்தார்.அதுமட்டுமல்லாது கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்திவைப்பதாக ஆளுநர் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கிறது திமுக அரசு.. இபிஎஸ் காட்டம்..!

இதைத் தொடர்ந்து மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ரிட் மனுவை தாக்கல் செய்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மசோதாக்களை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என தெரிவித்து இருந்தனர்.விழிப்புடன் இருக்க வேண்டும்,. மக்கள் நலன்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேர்மையற்ற வகையில் செயல்பட்டதாகவும், முந்தைய தீர்ப்புகளை மதிக்காமல் அவமரியாதை செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தனது 413 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் 413 பக்க முழு தீர்ப்பும் உச்ச நீதிமன்ற இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனை..! உடனடி தீர்வு காண ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..!