தலிபான் அரசு 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து லட்சக்கணக்கான சிறுமிகள் தங்களின் கல்விக்கான உரிமை கிடைக்காமல் உள்ளனர், இவர்களின் எதிர்காலம் மோசமாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் விரைவில் கல்வியாண்டு பிறக்க இருக்கும் நிலையில் சிறுமிகள் 6ம் வகுப்பு மேல்படிக்க தலிபான் அரசு தடைவிதித்துள்ளது.இதனால் 4 லட்சம் சிறுமிகளுக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது இதனால் 22 லட்சம் சிறுமிகள் 7ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் உள்ளனர்.

உலகிலேயே பெண் குழந்தைகளை பள்ளி உயர்கல்வி, கல்லூரி கல்விக்கு அனுப்பாமல் தடை செய்யும் ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டும்தான். ஆனால், இஸ்லாமிய சட்டப்படி நாங்கள் ஆட்சி நடத்துகிறோம் என்று தலிபான்கள் தங்களின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.
இதையும் படிங்க: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை..? அதிபர் ட்ரம்ப் திட்டம்..!
யுனிசெப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரூசெல் வெளியிட்ட அறிவிப்பில் “3 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆப்கானிஸ்தானில் சிறுமிகளின் கல்வியுரிமை மீறப்பட்டுள்ளது. அனைத்து சிறுமிகளும் பள்ளிக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும். இந்தத் திறமையான, புத்திசாலி சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டால், அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு நீடிக்கும்.

சிறுமிகளுக்கான கல்வி மறுப்பு என்பது, எதிர்காலத்தில் லட்சக்கணக்கான ஆப்கன் சிறுமிகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும். இந்தத் தடை 2030ம் ஆண்டுவரை நீடித்தால், 40 லட்சம் ஆப்கான் சிறுமிகளுக்கு கல்வி கிடைக்காமல் கல்வியுரிமை பறிக்கப்படும், தொடக்கக் கல்வியைக்கடந்து அவர்களால் கல்வி கற்க முடியாது.

பெண் மருத்துவர்கள், பெண் செவிலியர்கள் குறைந்து வருவது ஆப்கனில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் மருத்துவ வசதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஏற்கெனவே ஆப்கனில் 1600 மகப்பேறு கால இறப்புகள் நடந்துள்ளன, 3500க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தனர். இது வெறும் எண்கள் அல்ல, அவை இழந்த உயிர்களையும், சிதைந்த குடும்பங்களையும் குறிக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருந்துமா அடிவருடி அடிமை பாகிஸ்தான்..? ராஜ தந்திரங்களால் வியக்க வைக்கும் ஆப்கானிஸ்தான்..!