தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் நிதியைத் தர சட்டத்தில் இடம் இல்லை" என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழக அசியலில் பேசு பொருளாகியுள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் காட்டமாகப் பதிலடி கொடுத்தார். மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் மத்திய அரசு திணிப்பதாக திமுக அமைச்சர்களும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தர்மேந்திர பிரதானுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பதிலுக்கு பாஜகவினர் திமுகவை வசைபாடி வருகின்றனர். திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியும் மும்மொழியும் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த திமுகவின் மொழிப்போர் ஈகியர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்குக் கூட திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலிலோ, நாடாளுமன்ற தேர்தலிலோ போட்டியிட இதுவரை ஒருமுறை கூட திமுக வாய்ப்பு வழங்கியதில்லை. 1967ல் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை கடந்த 57 ஆண்டுகளில் திமுகவில் கட்சி நிர்வாகத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் உயர் பொறுப்பில் இருந்த தலைவர்களின் குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளில் ஒருவர் கூட ஹிந்தி எதிர்ப்பு என்கிற பெயரில் தன்னைத் தானே வருத்திக் கொண்டதில்லை. மாறாக ஹிந்தியைப் பாடத்திட்டமாகக் கொண்ட CBSE பள்ளிகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எந்த ஹிந்தி மொழி எதிர்ப்பை அரசியல் மூலதனமாக்கி கருணாநிதி குடும்பம் தமிழகத்தில் அரசியலில் நுழைந்ததோ, ஆட்சியில் அமர்ந்ததோ... அந்த ஹிந்தி மொழி தெரிந்த காரணத்தால்தான் மு.கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும், பேரன் தயாநிதி மாறனுக்கும் மீண்டும் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பளித்து வருகிறது.
இதையும் படிங்க: 'திராவிடம் என்றால் என்ன..? அது தெரியாதவர்களுக்கே திமுகவில் பதவி... அரசியல் விமர்சகர் ஆத்திரம்..!

எந்த ஹிந்தி எதிர்ப்பு அரசியலை வைத்து தமிழகத்தில் திமுக காலூன்றியதோ.. அந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அன்று உருவாக காரணமாக இருந்த காங்கிரஸோடு இன்று கூட்டணியும் வைத்து அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகளையும் 25 சட்டமன்ற தொகுதிகளையும் வழங்கி 15 ஆண்டுகளாக அவர்களோடு தோழமை பாராட்டி வருகிறது திமுக.
திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு கருணாநிதி குடும்பம் அரசியல் நடத்துவதற்காக செய்கிற நாடகமேயன்றி வேறொன்றும் இல்லை. ஹிந்தி எதிர்ப்பு நாடகம் நடத்துகிற அதே திமுக தான் தமிழகத்தில் அவர்களுடைய கட்சியினர் மூலம் மட்டுமே 40 CBSE பள்ளிகளை நடத்தி வருகிறது. அரசியலுக்காக ஹிந்தி எதிர்ப்பு..!!
ஆதாயத்திற்காக CBSE பள்ளியா?" என்று ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு தில் இருந்தால் இதைச் செய்ய முடியுமா..? பாஜக- திமுக இடையே சிண்டு முடியும் சீமான்..!