கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாடு அதிபரிடம் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் இலங்கை அதிபர் அநுரவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். பிரதமர் வலியுறுத்திய நிலையில் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்.. சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்..!

ஆனால், இலங்கை அரசிடம் பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையிலும் கூட, மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நான்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் இருந்த படகை சுற்றும் வளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மீனவர்களை தாக்கியதுடன், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்த தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.இதனிடையே, தாக்குதலுக்கு ஆளான நான்கு மீனவர்கள் காயத்துடன் வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் அதிகரிக்கும் யானைகள் அட்டகாசம்.. பழங்குடியினர் இருவர் பலி.. விசாரணைக்கு உத்தரவு..!