கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று கோவையில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரத்தின்போது தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அந்த சம்வத்தில் 58 பேர் உயிரிழந்தனர். அதன் 27ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி பாஜக சார்புல் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி கோவை ஆர்எஸ்புரம் தபால் நிலையம் அருகே இன்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஸ்வி சூர்யா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.

“கோவையில் 2022இல் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. ஆனால், தமிழக முதல்வர் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என தொடர்ந்து கூறினார். தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை. காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணமான தீவிரவாதியை இந்தியா கொண்டு வர அதிபர் ட்ரம்ப்பிடம் அனுமதி பெற்றுள்ளார்.

இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தீவிரவாதிகள் எங்கு இருந்தாலும் வேட்டையாடி கொண்டு வருவோம். பாஜக கட்சி ஒரு சமுதாயத்துக்கான கட்சி அல்ல. இந்திய கலாச்சாரத்துக்கு ஆதரவான கட்சி. அனைவரும் மே 21ஆம் தேதி பயங்கரவாதத்துக்கு எதிரான சங்கல்பத்தை ஏற்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக அரசு கடைசி ஓராண்டில் அடியெடுத்து வைத்துள்ளது" என்று அண்ணாமலை பேசினார்.
இதையும் படிங்க: அறிவாலயத்தின் துகளைக்கூட அசைக்க முடியாது... அண்ணாமலைக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி.!