யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தூய்மை பணியாளர்கள் என்கிற பெயரில் 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தியதாக சவுக்கு சங்கர் புகார் கூறியிருந்தார். அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர் என்றும் தன் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறியிருந்தார். இந்தத் தாக்குதலை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா இதுதொடர்பாக சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகளான கோபாலபுரம் கும்பலின் குண்டர் படையினர் யூடியூபர் சவுக்கு சங்கர் இல்லத்திற்குள் தூய்மை பணியாளர்கள் என்கிற போர்வையில் நுழைந்து வீட்டிலுள்ள உடமைகள் மீது தாக்குதல் நடத்தியும் வீட்டிற்குள் கழிவுநீரை ஊற்றி வீடு முழுவதையும் அசுத்தம் செய்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை அரங்கேற்றி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடையை கொட்டி அராஜகம்.. இபிஎஸ் கடும் கண்டனம்..!
திமுக ஆட்சியின் அவலங்களையும், ஊழல்களையும் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டி கேள்வி கேட்பவர்கள் மக்கள் மத்தியில் திமுகவின் சுயரூபத்தை தோலுரித்துக் கட்டுபவர்கள் மீது திராவிட மாடல் கும்பல் அதிகார துஷ்ரயோகத்தின் மூலம் வழக்குப் பதிவு செய்வதும், கைது செய்து சிறையில் அடைத்து தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் குண்டர் படையை ஏவிவிட்டு தாக்குதல் நடத்துவதும், திமுக மேடைகளில் அக்கட்சியின் ஆபாச பேச்சாளர்களை வைத்து அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்து வருவதும் வெட்கக்கேடான செயல் மட்டுமல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுகவின் காட்டாட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதும் தருணத்தை நோக்கி திமுக தனது வன்முறை பயணத்தை நாளுக்கு நாள் வேகப்படுத்தி வருவதை நம்மால் நன்றாக உணர முடிகிறது. வன்முறை அரசியலும், வன்கொடுமை ஆட்சியும் நீண்டகாலம் நிலைத்திருந்ததாக சரித்திரம் இல்லை என்பதை சர்வாதிகார சிந்தனை கொண்ட திராவிட மாடல் கும்பல் உணரும் தருணம் விரைவில் வரும்." என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நல்லா தூண்டி விடுறாங்க.. அராஜக போக்கை கையாளும் திமுக.. கொதித்தெழுந்த அண்ணாமலை..!