×
 

தமிழ் வார விழா.. இளம் படைப்பாளருக்கு விருது.. சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

பாவேந்தர் பாரதிதாசனின் புகழை பறைசாற்றும் வகையில் தமிழ் வார விழா கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அவர் பேசியதாவது: மொழி உணர்ச்சி மொழி மானம் ஆகியவற்றின் மொத்த உருவம் பாவேந்தர் பாரதிதாசன். பாரதிதாசன் எழுத்துக்களை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை. 

இதையும் படிங்க: தமிழ் வார விழா... இளம் படைப்பாளர் விருது... பேரவையில் சூப்பர் டூப்பர் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்...

கவிஞர் பாரதிதாசனின் பெருமையை போற்றும் வகையிலான அறிவிப்பை வெளியிடுவது பெருமைப்படுகிறேன். பாவேந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே ஐந்தாம் தேதி வரை ஒரு வார காலம் தமிழ் வார விழா கொண்டாடப்படும். இந்த ஒரு வாரம் தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழியையும், பாவேந்தர் பாரதிதாசனின் பெருமையை கொண்டாடும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கவியரங்கங்கள், மற்றும் இலக்கிய கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழ் அறிஞர்கள், இளம் கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள். தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர் ஒருவருக்கு பாரதிதாசன் இடம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும். புகழ்பெற்ற தமிழ் படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.

பள்ளிகளில் மாணவர்களிடம் தமிழ் மொழியின் பெருமைகளை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். தமிழிசை, நடனம், மரபுக் கலைகளை மையப்படுத்தி மாநில முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.  தமிழ் வார விழா மூலம் தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு இது ஒரு நல்வாய்ப்பாகும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

இதையும் படிங்க: புற்றுநோய் ஒழிப்பின் சாதனைப் பெண்மணி..! டாக்டர் சாந்தா சிலை, அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதல்வர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share