×
 

100 நாள் வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு..!

100 நாள் வேலை திட்டத்திற்கான தினசரி ஊதிய உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மத்திய அரசால் கடந்த 25ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 100 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்திற்கான அட்டை வைத்திருப்பவர்கள் வேலை தேவைப்பட்டால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கும். கிராமப்புறத்தில் வசிக்கும் வயதானவர்களை மனதில் வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. வயதான காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்க உதவி செய்கிறது.

இதையும் படிங்க: நஷ்டத்துக்கு லாரி ஓட்ட முடியாது! டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்!

குளம், ஏரி ஆழப்படுத்துதல், கால்வாய் புனரமைப்பு, சாலை அகலப்படுத்துதல் என பல்வேறு பணிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தங்கள் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்ட வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 25 கோடியே 25 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 14 கோடியே 35 லட்சம் பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர். 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ. 319 ஆக இருந்த 100 நாள் வேலை திட்ட ஊதியம் தற்போது ரூ.336 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை விட 17 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆந்திரா, அருணாச்சல பிரேதசம், அசாம், நாகலாந்து மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தலா 7 ரூபாய் வரை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக அரியானாவில் ரூ.26 உயர்த்தப்பட்டு ரூ.400ஆக 100 நாள் திட்ட ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: 2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share