×
 

தாய் இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன்.. தேனியில் கண்கலங்க வைக்கும் சம்பவம்..!

தேனியில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் உயிரிழந்த நிலையில் அவரது மகன் பொது கண்ணீர் மல்க பொதுத்தேர்வு எழுதச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான ஜெகநாதன், செல்வி தம்பதியினருக்கு சந்திரன் என்ற மகன் உள்ளார். மகன் சந்திரன் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது ஆஸ்துமா நோயால் அவதிக்கப்பட்டு ஜெகநாதன் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கணவர் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட அவரின் மனைவி செல்விக்கு, திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தேனியில் உள்ள செல்வியின் சகோதரி மூலம் அங்குள்ள மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் செல்வியின் மகன் சந்திரன், தனது பெரியம்மாவால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சேர்ந்து, நிலக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 

இதையும் படிங்க: காப்பி அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்.. ஆசிரியர் காரில் பட்டாசுகளை வீசிய மாணவர்கள்..!

இந்நிலையில் தேனியில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்த செல்விக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட செல்வி, நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து, நிலக்கோட்டை விடுதியில் தங்கிப் படித்து வரும் மாணவர் சந்திரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தாய் செல்வி இறந்த சோகத்தில் மாணவர் சந்திரன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், விடுதிக் காப்பாளர், ஆசிரியர் மற்றும் உறவினர்கள் மாணவர் சந்திரனை தேர்வு எழுதுமாறு கூறினார். 

பின்னர் கண்ணீருடன் மாணவர் சந்திரன் தேர்வு எழுதச் சென்றார். தேர்வு முடியும் வரை செல்வியின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிந்த பின், மாணவர் சந்திரன், உறவினர்களோடு சென்று இறுதிசடங்ககளை செய்தார்.

இதையும் படிங்க: தந்தை இறந்த துயரிலும்.. தேர்வு எழுத சென்ற 11 வகுப்பு மாணவன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share