×
 

நாளை தொடங்குகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு...!

நடப்பு கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் பொது தேர்வு நாளை தொடங்கி நடைபெற உள்ளது.

நடப்பு கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தினம் (மார்ச் 3 ஆம் தேதி) தொடங்குகிறது. மொத்தம் 8.21 லட்சம் பேர் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4.24 லட்சம் பேர் மாணவிகள், 3.78 லட்சம் பேர் மாணவர்கள் ஆவர். மேலும், தனித் தேர்வர்கள் 18,344 பேர், கைதிகள் 145 பேர் ஆவர். 

மொத்தம் 3,316 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.நேர்மையான முறையில் தேர்வு நடைபெறும் வகையில் 4,800 பறக்கும் படைகள் தயாராக உள்ளனர்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்... 14 வயது சிறுமியும் 16 வயது சிறுவனும் திருமணம்.!

தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075 அல்லது 9498383076 ஆகிய கட்டுப்பாட்டு அறை உதவி எண்களுக்கு அழைக்கலாம் என a அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3ஆம் தேதி தொடங்கும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 5ஆம் தேதி தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை நடக்கின்றன. மேலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறவுள்ளன. மாணவர்கள் மன அழுத்தம் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுத்தேர்வை ஒட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். மேலும், தனியார் பள்ளிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்வு மையம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார். 

இதையும் படிங்க: இப்படியுமா நடக்கும்...விட்டா போதும்டா சாமின்னு ஓடிய மணமகன்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share