குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 16 வயது சிறுவன் கைது..
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் அவரது மகளை வழக்கம்போல் அங்கன்வாடிக்கு அனுப்பியுள்ளார். அப்போது அந்த மாணவி உணவு இடைவேளைக்குப் பின்னர் கை கழுவ சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி பள்ளிக்கு திரும்பாததால் அங்கன்வாடி ஆசிரியர்கள் சிறுமியை தேடி உள்ளனர். ஆசையை மற்றும் உதவியாளர் தேடிய நிலையில் அங்கன்வாடிக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குழந்தையின் சத்தம் கேட்டுள்ளது. அவர்கள் அங்கு சென்று பார்த்த போது சிறுமி தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மற்றும் உதவியாளர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சிறுமியை கர்ப்பமாக்கிய மூர்க்க மத போதகர்.. கேரளா போலீஸ் கொடுத்த துப்பு.. கோவையில் குடும்பத்துடன் சிக்கிய மத போதகர்..!
அப்போது அந்த சிறுவன் கை கழுவு வந்த சிறுமியை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற போது சத்தம் போட்டதால் ஆத்திரத்தில் கல்லால் தலை மற்றும் முகத்தில் அடித்து காயப்படுத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் போக்சஸ் சட்டம் உள்ளேற்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஏழு அரக்கர்கள்.. 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு