ஆசிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி.. சுத்தம் செய்யும் பணியின் போது இருவர் பலி!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணியின் போது இரண்டு பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆசிட் ஏற்றிச் சென்ற லாரியை சுத்தம் செய்யும் பணியானது நடைபெற்றது. அப்போது ஊழியர்களின் மூவர் லாரியின் உள் பக்கம் சென்று சுத்தம் செய்துள்ளனர்.
இந்த பணியின் போது லாரியினுள் மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லாரியினுள் இருந்தது அவர்களை மீட்க போராடியுள்ளனர். தொடர்ந்து இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா.? ஒரு முடிவில் இருக்கும் அண்ணாமலை.!!
தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தது அதே பகுதியை சேர்ந்த யுவேநந்தல் மற்றும் சக்திவேல் என்பது தெரிய வந்தது. மேலும் செல்லப்பன் என்ற தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்ன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரமலான் எதிரொலி.. ஒன்றரை கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்!