4ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் திடீர் திருப்பம்... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!
மணப்பாறை தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவியிடம் பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.
மணப்பாறை தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவியிடம் பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.
தாளாளருக்கு தர்ம அடி, அடித்து நொறுக்கப்பட்ட பள்ளி:
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தபள்ளியில் பயின்ற 4 ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்ற நிலையில் மதிய நேரத்தில் வகுப்பறையில் இருந்த மாணவியிடம் பள்ளியின் அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை ... கீழே தள்ளிவிட்டு தப்பிய இருவருக்கு வலைவீச்சு ...!
இதையடுத்து மாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் வசந்த குமாரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அதே கல்வி நிறுவனத்தின் மற்றொரு அங்கமான மெட்ரிகுலேஷன் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்த அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொருக்கினர். மேலும் அங்கிருந்த காரின் கண்ணாடியையும் உடைத்து நொறுக்கிய தோடு காரை கவிழ்த்தனர்.
முக்கிய குற்றவாளிகளை தட்டித்தூக்கிய போலீஸ்:
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமியை தேடி வந்தனர். இதனிடையே, தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமி இன்று காலை மணப்பாறை காவல்நிலையத்தில் சரணடைந்தார். மேலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாளாளரின் கணவர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மாராட்சி, செழியன், தாளாளர் சுதா உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர்களிடம் விசாரணை:
தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு நடந்த பாலியல் சீண்டல் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் கல்வி அதிகாரிகள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது மேலும் ஒரு மாணவி தனது பெற்றோருடன் வந்து தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 5ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசந்தகுமார் தன்னிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் வசந்தகுமார் மேலும் பல மாணவிகளிடம் அத்துமீறி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அனைத்து மாணவிகளிடமும் விசாரணை நடத்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அடுத்து நடக்கப்போவது என்ன?
நேற்றைய தினமே மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் சீண்டல் நடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் ஒரு புகார் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது எனவும் மீண்டும் திங்கள் கிழமை விசாரணை நடத்த உள்ளதாகவும், அன்றையதினம் பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளதாகவும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி தகவல்.
பள்ளி ஆசிரியர்களிடம் இதுகுறித்த தகவல் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணை குறித்த அறிக்கை
மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கபடும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் மூன்று பள்ளி 'சார்'கள் சிறுமிக்கு செய்த அட்டூழியம்... ஸ்டாலின் அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.!