தாயக்கு பயந்து தற்கொலை.. 5ஆம் வகுப்பு மாணவி விபரீதம்.. கதறி துடித்த பெற்றோர்..!
சென்னையில் ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த லாசர் - கௌசல்யா தம்பதியினரின் மகள் அதே பகுதியில் உள்ள ஊராட்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கௌசல்யா அவரது மகளை வேலைக்குச் செல்லும் போது பள்ளியில் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தம்பதியினரின் மகளுக்கு பள்ளி விடுமுறையை முன்னிட்டு கௌசல்யா வழக்கம் போல் வேலைக்கு சென்ற போது மகளிடம் வீட்டு வேலையை செய்து வைக்குமாறு அறிவுறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலை கௌசல்யா வீட்டிற்கு வரும் வரை மகள் வீட்டு வேலை ஏதும் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தாய் கௌசல்யா வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் தன்னை அடிப்பாரோ என அஞ்சிய மாணவி வீட்டில் அவரது சகோதரர்களின் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: சொத்து தகராறில் அரங்கேறிய பயங்கரம்.. தந்தையை வெட்டி படுகொலை செய்த மகன்
இதுகுறித்து மாணவியின் சகோதரர் அளித்த தகவலன்படி வீட்டிற்கு விரைந்த பெற்றோர், தற்கொலை செய்து கொண்ட மகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். முன்னதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாணவியை தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேற ஏதேனும் காரணங்கள் உள்ளதா என சந்தேகத்தின் அடிப்படையில், மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இடையே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அளவுக்கு மிஞ்சிய சொத்து ஆசை.. தந்தையை கொலை செய்த மகன் கைது!