×
 

'தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சரா..? இது தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சி... படபடக்கும் திருமாவளவன்..!

ஆர்.எஸ்.எஸ், பாஜக பக்கம் ஈர்ப்பதற்காக அடிக்கடி அவர் தலித்துகளைப் பற்றியும் பேசுகிறார்.தலித்த ஒருவர் முதல்வராக வேண்டும் என்று அவர் பேசியுள்ளது சூது.. சூழ்ச்சி.

தமிழகத்தில் பட்டியலினத்தவர் முதல்வராக வேண்டும் என்ற ஆளுநரின் பேச்சு, தலித் வாக்குகளை அபகரிப்பதற்கான சூழ்ச்சி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ''பெரியாரை கொச்சைப்படுத்தும் வேலையில் போலி தமிழ்தேசியவாதிகள் இறங்கியுள்ளனர். சீமான் பேசுவது மிகவும் ஆபத்தான அரசியல். பாஜகவின் கொள்கை பரப்பு அணி போல் சீமான் செயல்படுகிறார். பொருத்தம் இல்லாத அரசியலை சீமான் பேசிக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் இப்போது பெரியாரை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று புரியவில்லை. பாஜக தரவாளர்கள் வாக்குகளை பெற இந்த யுக்தியை சீமான் கையாளுகிறாரா? என்கிற ஐயம் எழுகிறது.  திருமாவளவன்

தமிழகத்தில் பட்டியலினத்தவர் முதல்வராக வேண்டும் என்ற ஆளுநரின் பேச்சு, தலித் வாக்குகளை அபகரிப்பதற்கான சூழ்ச்சி என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய வேங்கைவயல் சம்பவம்; சந்தேகத்தை கிளப்பும் திருமா...!

''ஆர்.என்.ரவி மீண்டும் மீண்டும் ஒரு அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆளுநர் என்கிற பொறுப்பை மறந்தது அவர் பேசுவதும், செயல்படுவதும் நீடிக்கிறது.தலித்துகளை வலதுசாரிகள் பக்கம் கவர்வதற்காக, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், பாஜக பக்கம் ஈர்ப்பதற்காக அடிக்கடி அவர் தலித்துகளைப் பற்றியும் பேசுகிறார்.தலித்த ஒருவர் முதல்வராக வேண்டும் என்று அவர் பேசியுள்ளது சூது.. சூழ்ச்சி. இதில் ஒருபோதும் தமிழகத்தை சார்ந்த தலித்துகள் ஏமாற மாட்டார்கள் என்பதை ஆளுநருக்கு தெரிவித்துக்ொள்ள நான் கடமைப்பட்டு இருக்கிறேன். திடீரென்று சுவாமி ஜெகஜ்ஜானந்தாவுடைய நிகழ்வுகளில் பங்கேற்பதும் தலித்துக்களைப்பற்றி கரிசனமாக பேசுவதும், தலித்துகள் முதல்வராக வேண்டும் என்பதும் ஒரு திட்டமிட்ட வலதுசாரி அரசியல் நாடகம் என்பதை விடுதலை சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறது. 

வேங்கைவயல் விவகாரத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். அவர்களை சென்று சந்திப்பதற்கு காவல்துறை அனுமதி அளிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறை தன்னுடைய கெடுபிடி நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். சமூகநீதி சமத்துவம் என பேசுகிற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்தக் கட்சி ஆளுநர் அவர்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதனால், அவர் ஆதிதிராவிடர்களை விடுதலைச் சிறுத்தைகளை அந்நியப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். அவருடைய முயற்சி பலிக்காது'' என அவர் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: “ஒரு அடி கூட உள்ள வர முடியாது” - திருமாவுக்கு நேரடி சவால்; போலீஸ் வளையத்திற்குள் வேங்கைவயல்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share