×
 

சக்கர நாற்காலியுடன் அரசு பேருந்தில் பயணித்த மாற்றுத்திறனாளி பெண் : நடத்துனரின் மனிதநேயம்

பூந்தமல்லி அருகே சக்கர நாற்காலி உடன் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் எளிமையாக பயணிக்க உதவி செய்த நடத்துனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சென்னை பூந்தமல்லி முதல் திருவெற்றியூர் வரை 101 எண் கொண்ட மாநகர அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் இதே எண்ணில் அரசு சார்பில் அண்மையில் தொடங்கப்பட்ட தாள்தல பேருந்து சேவையும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பூந்தமல்லியில் இருந்து கரையன்சாவடி வரை பயணித்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பேருந்தில் உள்ள தாள்தல வசதியை பயன்படுத்தி எளிமையாக பயணம் மேற்கொண்டார். அனுசியா என்ற அந்த பெண்ணுக்கு நடத்துனர் சுரேஷ்குமார் பேருந்தில் ஏறுவதற்கும் மீண்டும் இறங்கி செல்வதற்கும் உரிய உதவிகளை செய்தார். அந்த காட்சிகள்  காண்போரை  நிகழ்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும்   சென்னை மாநகர பேருந்து கழகம் சார்பில் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சுரேஷ்குமாருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று மொத்தம் 502 பேருந்துகள் சென்னையில் இயக்கப்படுவதாகவும் அதில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாநகர பேருந்து ஓட்டுநர்கள் உதவி புரிய தயாராக இருப்பதாகவும் மாநகர பேருந்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓடி ஒளிகிறான் உதயசூரியன்.. பாஜகவின் அதிரடி வியூகம்.. 'ரத்த கண்ணீர்' ராதாவாகும் திமுக.. ஆட்டுவிக்கும் அதிமுக, தவெக,நாதக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share