×
 

மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு ஸ்கெட்ச்... கட்டம் கட்டி அதிரடி ஆக்சனில் இறங்கிய போலீஸ்!!

மதபோதகர் ஜான் ஜெபராஜ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தென்காசியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். கிறிஸ்தவ மத போதகரான இவர் லெவிமினிஸ்ட்ரிஸ் என்ற மதபோதக அமைப்பை நிறுவி, அதனை நடத்தி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கோவையில் வசித்து வந்த ஜான் ஜெபராஜ், கிராஸ்கட் ரோட்டில் கிங்ஸ் ஜெனரேஷன் சர்ச் என்ற பெயரில் தனியாக ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை மற்றொரு பாஸ்டருடன் சேர்ந்து நடத்தி வந்துள்ளார். அது தற்போது மூடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் கோவைக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு தனியாக அரங்கங்களை எடுத்து ஜெபக்கூட்டம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு மே.21 ஆம் தேதி ஜான் ஜெபராஜ் வீட்டில் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 17 வயது சிறுமிக்கும், 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி, ஜான் ஜெபராஜ் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்புவதை தடுக்க, அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு கோவை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: நமக்குள்ள மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்.. எவனோ கேம் ஆடுறான்.. சிறுமிகளிடம் கெஞ்சிய போக்சோ போதகர்..!

முன்னதாக ஜான் ஜெபராஜ் பேசியதாக சமூக வலைதளங்களில் சில ஆடியோக்கள் பரவியது. அதில், நம்ம இரண்டு பேருக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. அதை வைத்து யாரோ கேம் விளையாடி அசிங்கத்தை ஏற்படுத்தி, உன்னை நடுத்தெருவில் நிறுத்தி இருக்காங்க. என்னையும் துரத்தி துரத்தி ஓட வச்சிருக்காங்க. கர்த்தர் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி பிரச்சினை நடக்கும் போது எல்லாம் மனுஷனுக்கும் செத்துப் போயிடலாம்னு தோணும். எனக்கும் அந்த மாதிரி நான்கு ஐந்து முறை எண்ணம் வந்தது.

ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஜெபம் பண்றேன். இப்படி தப்பு பண்ணிட்டு எப்படி இப்படி செய்கிறான் என்று நினைக்கலாம். நம்ம ரெண்டு பேருக்கு தான் என்ன நடந்துச்சுன்னு தெரியும். கர்த்தர் என்னை பார்த்துக்கொள்வார். மறுபடியும் சொல்றேன். உன்னை நான் பொது இடத்தில் அசிங்கப்படுத்த மாட்டேன் என அதில் பேசியிருக்கிறார். இதனிடையே ஜான் ஜெபராஜ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். நெல்லை மற்றும் தென்காசியிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு, ஜெபராஜை தேடிவருகின்றனர். 

 

இதையும் படிங்க: பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை.. உடல் முழுவதும் கடித்து வைத்த காமுக தந்தை.. வாய் பேச முடியாத பெண்ணுக்கு துயரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share