இளையதளபதி ஜோடியின் சூப்பர் லுக் போட்டோ.. விருது வாங்க இப்படி ஒரு காஸ்டியுமா..!
விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையிட்டு வருகிறது.
மிஸ் இந்தியா அழகி போட்டிகளில் பங்கேற்று கிரீடம் சூட்டப்பட்ட, மீனாட்சி சவுத்ரி முன்னணி தெலுங்கு பட நடிகர்களின் படத்தில் நாயகியாக கொண்டாடப்பட்டவர். தெலுங்கு திரையுலகின் மாடன் கதாநாயகியான மீனாட்சி சவுத்ரி, இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். அதன் படி தற்பொழுது இவருக்கு 28 வயதாகிறது. ஆனால் தனது வயதிற்கும் நடித்த படங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல், தமிழ் சினிமாவில் விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியான 'கொலை' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, தமிழில் நடிகர் விஜயுடன்'தளபதி 68' திரைப்படமான "தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)" திரைப்படத்தில் நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார். இப்படத்தில் குட்டி விஜய்க்கு காதலியாக இருக்கும் இவர், தனது காதலனான குட்டி விஜய் கைகளாலேயே கொலை செய்யப்படுவார். ஆனால் அப்படத்தில் இருவரது காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இதையும் படிங்க: பேண்ட் சொக்காவில் கிளாமர் நடிகை.. அப்ப கிராமத்து அழகி.. இப்ப மாடல் அழகி..!
அதுமட்டுமல்லாமல் ஆர்.ஜெ.பாலாஜியின் வித்தியாசமான கதையில் உருவான "சிங்கப்பூர் சலூன்" திரைப்படத்தில் அவருக்கு மனைவியாகவும் தோல்வி நேரத்தில் அவருக்கு ஆறுதல் சொல்லும் குடும்ப பெண்ணாகவும் இருப்பார். மேலும், சாத்தியராஜுக்கு மகளாக இப்படத்தில் இவர் நடித்தது தான் இவருக்கு மிகவும் புகழை தேடித்தந்தது.
அதை தொடர்ந்து, "உன் தலை முடில இருந்து கால் நெகம் வரைக்கும் என்ன வெல்லாம் புடித்திருக்கிறதோ வாங்கிக்கோ அவ்வளவு சம்பாதித்து வைத்து இருக்கிறேன்" என துல்கர் சல்மான் சொல்வதும், "நிறைய பணம் சம்பாரிக்கனும்,இல்லைனா நம்மை மதிக்க மாட்டார்கள்" என மீனாட்சி சவுத்ரி சொல்லும் டையலாக்கும் கேட்டு அனைவரையும் கண்கலங்க வைத்த படம் தான் "லக்கி பாஸ்கர்" இத்திரைப்படத்தில் துல்கருக்கு மனைவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
இப்படி மாடலாக இருந்து தனது உழைப்பால் கதாநாயகியாக வலம் வரும் இவரது சம்பளம் தற்பொழுது ஒருபடத்திற்கு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை பெறுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தனது 28 வயதில் மீனாட்சி சவுத்ரிக்கு ஐதராபாத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள சொகுசு வீடும் உள்ளது.
இந்தநிலையில், சினிமா விருது பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீனாட்சி சவுத்ரியின் ஆடைகளையும், அவரது போட்டோ போஸ்களையும் பார்த்த ரசிகர்கள், உண்மையில் அழகுக்கு பெயர் போனவர் மீனாட்சி சவுத்ரி என்றால் மிகையாகாது என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘என் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளிகூட இல்லை, ஆனால்…’ நடிகைக்காக கலங்கிய டிஜிபி..!