×
 

ஹனிமூன் சென்ற இடத்தில் ரம்யா பாண்டியன் கொண்டாடிய ரொமான்டிக் கிறிஸ்துமஸ்!

நடிகை ரம்யா பாண்டியன், திருமணம் முடிந்து தற்போது ஹனிமூன் சென்றுள்ள நிலையில், கணவர் லோவல் தவானுடன் கிருஸ்துமஸ் கொண்டாடி மகிழும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

திரைப்பட ஹீரோயின் என்றாலே, கேரளா, ஆந்திரா மற்றும் மும்பையில் இருந்து வந்தவர்கள் தான் அதிகம்.

ஆனால் சமீப காலமாக திரைப்படங்களில் தமிழ் பட நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
 

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்து, இங்கேயே படித்து - நடிக்கவும் துவங்கியவர் ரம்யா பாண்டியன்.

இதையும் படிங்க: ஹனி மூன் போன இடத்தில் கணவரை கழட்டிவிட்டுட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த முத்தம் யாருக்கு தெரியுமா?

சித்தப்பா அருண் பாண்டியன் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்த போதும், ரம்யா பாண்டியன் தன்னுடைய திறமையால் மட்டுமே திரையுலகில் ஜொலிக்க தொடங்கினார்.

படிக்கும் காலத்தில் பல ஷார்ட் ஃபிலிமில் நடித்த ரம்யா பின்னர், 'டம்மி டப்பாசு' படம் மூலம் ஹீரோயினாக மாறினார். படத்தின் பெயருக்கு ஏற்ப, இவர் நடித்த முதல் படம் நமத்து போனது. 

இதை தொடர்ந்து நடித்த இயக்குனர் ராஜு முருகனின் 'ஜோக்கர்' ரம்யா பாண்டியனை ஒரு சிறந்த நடிகையாக பார்க்க வைத்தது.

ஆனால் திரைப்பட தேர்வு சரியாக இல்லாததால், தோல்வி பட நடிகையாக மாறினார்.

இதை தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக, ரம்யா பாண்டியன் நடத்திய மொட்டை மாடி போட்டோ ஷூட், இவரை ஒரே நாளில் சென்சேஷனல் பிரபலமாக மாற்றியது.

ரம்யா பாண்டியனின் புதிய போட்டோ ஷூட்டை பல இளசுகள் தேடி தேடி ரசித்து வந்தனர்.

பின்னர் சின்னத்திரை பக்கம் ரம்யா பாண்டியனின் கவனம் திரும்பியது. குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தார்.
 

சின்னத்திரை நிகழ்ச்சிகள் பிரபலத்தை பெற்று தந்தாலும், பட வாய்ப்பை பெற்று தரவில்லை. எனவே கமுக்கமாக கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த யோகா ட்ரைனர் மற்றும் தொழிலதிபர் லோவன் தவான் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் மிகவும் எளிமையாக நடந்தாலும், ரிசப்ஷன் பிரமாண்டமாக நடந்தது.

திருமணம் முடிந்த கையேடு, கணவருடன் ரம்யா பாண்டியன் ஹனிமூனுக்கு பேங்க்காங் சென்றுள்ள நிலையில், இவரின் கிருஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

இதையும் படிங்க: ஹனி மூன் போன இடத்தில் கணவரை கழட்டிவிட்டுட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த முத்தம் யாருக்கு தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share