×
 

போட்டோவால் மிரள வைத்த ஷாக்ஷி... கல்யாணம் தமிழ்நாடு.. ஹனிமூன் மாலத்தீவு..!

திருமணம் முடிந்த பின் ஹனிமூன் சென்ற நடிகை ஷாக்ஷி, தனது கணவருடன் இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

தற்பொழுது நடிகைகளின் திருமணம் வரிசையாக நடைபெற்று வருகிறது. தங்கத்தில் தாலி கட்டுவது, மோதிரம் போடுவது என முறைகள் மாறி கொண்டு இருக்க, நடிகைகள் மஞ்சள் கயிறு தாலியை கழுத்தில் அணிந்த படி செல்வது அவர்களின் அழகை மேலும் கூட்டும் வகையில் இருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் வரிசையில் தற்பொழுது திருமண பந்தத்தில் இணைந்து இருக்கிறார்  ஷாக்ஷி அகர்வால்.

திருமணத்திற்கு பின் நடிகைகள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், ஹனிமூன் போட்டோ ஷூட் தான். இவர்களை தொடர்ந்து ஷாக்ஷியும் தனது ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: 25-என பொய் சொன்ன 38! 17 வயது கல்லூரி மாணவிக்கு காதல் வலை.. போக்சோவில் தட்டிதூக்கிய போலீஸ்..

அட்லீ இயக்கத்தில் உருவான 'ராஜா ராணி' திரைப்பத்தில் சின்ன ரோலில் நடித்தாலும், அப்படத்தில், சந்தானத்தின் விளக்கத்தில் மீம்கள் வரைக்கும் சென்று பிரபலமானவர் ஷாக்ஷி அகர்வால். பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இதனை தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நல்ல ரோலில் நடித்துள்ள 'ஃபயர்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இவர் நடிப்புக்கு ஒரு கூட்டம் பின் தொடர்வதை போல், இணையத்தில் இவர் பகிரும் உடற்பயிற்சி வீடியோ, போட்டோ ஆகியவற்றை பின் தொடர்ந்து வரும் கூட்டமும் அதிகம். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடிகை சாக்ஷி அகர்வால், நவ்நீத்தை காதல் திருமணம் செய்தார். திருமணம் முடித்த கையோடு ஹனிமூன் போவார் என்று பார்த்தால் தனது கணவருடன் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்ததுடன் படப்பிடிப்பிலும் பிஸியாக இருந்தார். இந்த நிலையில் திருமணமான இரண்டு மாதத்திற்கு பிறகு தற்போது இருவரும், ஹனிமூனை மாலத்தீவில் கொண்டாடி வருகின்றனர். மேலும் அங்கு எடுத்த போட்டோக்களையும் பகிர்ந்து உள்ளனர். இத்தனை நாள் சிங்கிளாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஷாக்ஷியை டபுளாக பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி இருக்கின்றனர்.
 

இதையும் படிங்க: இதை குழந்தைங்க சாப்பிட்டா என்ன ஆகுறது? வறுத்த மீனில் நெளிந்த புழுக்கள்.. அலட்சியமாக பேசிய கடைக்காரர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share