செதுக்கி வச்ச சிலை! சேலையில் சூடேற்றும் 23 வயசு இளம் சிட்டு; ஸ்ரீலீலா போட்டோஸ்!
ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது ஸ்ரீலீலா சேலை அழகில் வசீகரிக்கும் போட்டோஸ்.
புஷ்பா 2 படத்தில் கவர்ச்சி உடையில் ஐட்டம் டான்ஸுக்கு குத்தாட்டம் போட்ட, ஸ்ரீலீலாவா இது? என ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது ஸ்ரீலீலா சேலை அழகில் வசீகரிக்கும் போட்டோஸ்.
19 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீலீலா, இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் மட்டும் அல்ல படிப்பிலும் அம்மணி படு சுட்டி தான். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், வெற்றிகரமாக தன்னுடைய மருத்துவ படிப்பையும் முடித்து விட்டார்.
கடந்த ஆண்டு மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக, 'குண்டூர் காரன்' படத்தில் கதாநாயகியாக நடித்த, ஸ்ரீலீலாவை பான் இந்தியா அளவுக்கு பிரபலப்படுத்தியது, புஷ்பா 2 திரைப்படம் தான்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான இந்த படத்தில், ஸ்ரீலீலா 'கிஸ்ஸிக்' என்கிற ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டு ரசிகர்களை அசரடித்தார்.
அடுத்தடுத்து இவருக்கு ஒருபுறம் பட வாய்ப்புகள் வரிசை கட்டிக்கொண்டிருக்க, தற்போது சிவகார்திகேயனுக்கு ஜோடியாக, சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையோடு துவங்கியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனை தவிர ஜெயம் ரவி, அதர்வா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டான் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
மாடர்ன் உடையில் மட்டும் இல்ல... சேலையில் கூட நான் செதுக்கு வச்ச சிலை தான் என்பது போல் அழகு பதுமையாக மாறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.