2 மாசம் போதாதா? அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களை வெளுத்து வாங்கிய இபிஎஸ்..!
பூத் கமிட்டி அமைக்க 2 மாசம் போதாதா என அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி கண்டித்துள்ளார்.
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்தில் 82 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது சரியாக செயல்படாத மாவட்ட பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி கண்டித்தார். உங்கள் மாவட்டத்தில் எந்த நிர்வாகி இடையூறாக உள்ளார் என கேள்வி எழுப்பினார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி தான் முக்கியம் என்று கூறிய அவர், பூத் கமிட்டியை அடிப்படையாக கொண்டு தான் அனைத்து பணிகளையும் திட்டமிட்டுள்ளதாக கூறினார். பூத் கமிட்டி விவகாரத்தில் சுணக்கம் காட்டினால் ஏற்றுக் கொள்ளவே முடியாது என கூறிய எடப்பாடி பழனிச்சாமி, பூத் கமிட்டியை சிலபேர் இன்னும் முழுமையாக அமைக்கவில்லை என்றும் 2 மாதங்கள் போதவில்லையா எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்ததும், அதிமுக வைப்பதும் ஒன்றாகி விடுமா..? நியாயப்படுத்தும் திமுக..!
ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளரையும் தனித்தனியாக எழுந்து பேச வைத்தார். அப்போது, 42 வயதுக்குள் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க சிரமமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எந்த நேரத்திலும் திமுக கூட்டணி டமார்.. கொளுத்திப் போடும் மாஜி அதிமுக அமைச்சர்.!!