வரும் 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, நடைபெற உள்ளதாக கூறபட்டுள்ளது.
எனவே, இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: வக்கில்லாத கோமா அரசே..! 3 பேர் இறப்புக்கு நீங்க மட்டும் தான் காரணம்.. கொதிப்பில் இபிஎஸ்..!
இதையும் படிங்க: கூட்டணி.. ஆட்சி.. சர்ச்சை! அனுமதியின்றி பேட்டிக் கொடுக்காதீங்க.. அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!