×
 

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மறுப்பு.. சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளி..!

மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கூறி அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இன்று சட்டசபை கூடிய நிலையில், மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுகவினர் வலியுறுத்தினர். செந்தில் பாலாஜி, பொன்முடி, கே. என் நேரு ஆகிய அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம், அதிமுக உறுப்பினர்கள் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி சட்டசபையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அதிமுகவினருக்கு பதில் அளித்த சபாநாயகர், அரை மணி நேரத்திற்கு முன்னதாக கடிதம் கொடுத்துள்ளீர்கள் என்றும் பரிசீலனையில் உள்ளது, நான் என்னுடைய முடிவை சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே அலுவல் நிறைய இருப்பதால் இன்று எடுத்துக் கொள்ள முடியாது என்று சபாநாயகர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.. 

இதனை ஏற்க மறுத்த அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதோடு பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து தங்களுக்கு பேச அனுமதிக்கவில்லை என கூறி சட்டசபையில் இருந்து வெளியேறிய அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி உருவானது எப்படி.? விஜய்யை வைத்து பின்னணியில் நடந்த அரசியல்.. அம்பலப்படுத்திய குருமூர்த்தி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share