×
 

இன்னைக்கும் தரமான சம்பவம் இருக்கு...! சட்டப்பேரவைக்குள் நுழைந்த அதிமுகவினரைப் பார்த்து விழிபிதுங்கிய திமுக! 

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் கறுப்பு சட்டையில் யார் அந்த சார்? பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவை வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி “யார் அந்த சார்?” என்ற போராட்டத்தை அதிமுக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. யார் அந்த சார்? என்ற வாசத்துடன் முதலில் சென்னையில் போராட்டத்தை தொடங்கிய அதிமுக, தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களின் வாகனங்களில்  “யார் அந்த சார்?” என்ற ஸ்டிக்கரை ஒட்டி, பட்டி, தொட்டி வரை போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. 

சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்: 

தற்போது 2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் முதல் நாளில் இருந்தே தொடர்ந்து அதிமுகவினர் யார் அந்த சார்? பேட்ஜ் அணிந்தே பங்கேற்று வருகின்றனர். குறிப்பாக நேற்று கறுப்பு சட்டையில் யார் அந்த சார்? பேட்ஜ் அணிந்து அதிமுகவினர் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். நேற்று பேரவையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் எம்.பி...! ஒற்றை கேள்விக்கே அதிர்ந்து போன திமுக! 

இந்த தீர்மானத்தின் மீது பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொங்கு ஈஸ்வரன், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததே மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு காரணம் என குற்றம்சாட்டினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார், காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாலி, மாரிமுத்து, புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரும் இதே கருத்தையே வழிமொழிந்தனர். 

அதிமுக பேசியது என்ன? 

அதிமுக சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.வி. உதயக்குமார், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் மர்மர் நிறைந்ததாக காணப்படுவதாக குற்றஞ்சாட்டினார். யார் அந்த சார் என கேள்வி எழுப்பவும், போராட்டம் நடத்தவும் ஜனநாயக நாட்டில் அனுமதி மறுக்கப்படுவதாக பேசினார். இதேபோல் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினர். 

ஆவேசமான முதல்வர்: 

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் நின்று நீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க ஆணித்தரமாக அரசு செயல்படும் என்றும், குற்றச்செயல் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அதனை மீறி எதிர்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்துடன் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டினார். உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புக் குழு தான் புலன் விசாரணை செய்து வருவதால் யார் அந்த சார்? என்பது விரைவில் தெரிய வரும் என்றும், யார் அந்த சார்? என கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகளே அதற்கான ஆதாரம் இருந்தால் புலன் விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து வலியுறுத்தினார். ஒருகட்டத்தில் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இன்றும் கறுப்பு சட்டையில் அதிமுக: 

நேற்று சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக காரசார விவாதம் நடந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினே விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், முதல்வரின் விளக்கத்தில் திருப்தி அடையாத அதிமுக 4வது நாளாக இன்றும் சட்டப்பேரவைஇல் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து புயலைக் கிளப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஆண்கள் கறுப்புச்சட்டையிலும், பெண் உறுப்பினர்கள் கறுப்பு புடவையிலும் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து கொண்டு பங்கேற்றுள்ளனர். இதனால் இன்றும் பேரவையில் பரபரப்பான விவாதம் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இதையும் படிங்க: அங்கிட்டு ஞானசேகரன் இங்கிட்டு சுதாகர்..! கழகங்களின் மானத்தை வாங்கும் நிர்வாகிகள்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share