'பேடியே… கேடியே… பொன்முடிக்கு செருப்பைத் தூக்கி எதிர்ப்பு... அதிமுக மகளிரணியின் அறிவார்ந்த போராட்டம்..!
அவரது தாயாரை பேசுவதும், நாயென்றும் இடித்துரைப்பதும், செருப்பை தூக்கி காட்டுவதும்...
சைவ- வைணவ சமயக் குறியீடுகளையும், விலைமாதுவின் கதையையும் தொடர்புபடுத்தி, பெண்களையும், இந்து மததையும் இழிவாக பேசியதாக கூறி அமைச்சர் பொன்முடிக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமைச்சர் பொன்முடியில் பேச்சை திமுகவினரே கண்டித்து வருகின்றனர். அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இன்று அதன்படியே நடந்த அந்த ஆர்பாட்டத்தில் மகளிரணி முழங்கிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே, அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோகுல இந்திரா உட்பட 1000க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். கைகளில் செருப்பை ஏந்தி பெண்களை இழிவாக பேசியதற்காக அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, குடும்பம் உனக்கொரு கேடா? பெண்களை பலிக்கும் பேடியே… நீ ஒரு தாய்க்கு பிறந்தவனா? தெரு நாய்க்கு பிறந்தவனா..?
இதையும் படிங்க: ஆபாசப் பேச்சு..! பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்..!
ஏற்கெனவே உனக்கு கிடைத்தது விழுப்புரத்தில் சானியடி… இப்போது பெண்கள் பொங்கி எழுந்து கொடுக்க இருப்பதோ டே… டே…. வக்கிரபுத்தி கொண்டவனே. வாய்க்கொழுப்பெடுத்த பொன்முடியே… வந்தால் கிடைக்கும் சவுக்கடி ஓசி பஸ், ஓசி பஸ் என்று பேசி பெண்களை இழிவு படுத்தும் பாதகனே. வரலாறு உண்டு மதுரையை எரித்த வரலாறு உண்டு. பொன்முடியை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கிய ஸ்டாலினே… அமைச்சர் பதவியில் இருந்தும் தூக்கியடி என கோஷங்களை எழுப்பினர்.
அமைச்சர் பொன்முடி பேசியதற்காக அவரது கட்சி பதவி பிடுங்கப்பட்டுள்ளது. பொன்முடியும், தான் பேசியது தவறு என்று மன்னிப்பும் கேட்டு விட்டார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கண்டித்து போராட்டம் நடத்துவது தப்பில்லை. ஆனால், அவர் பேசிய அதே அநாகரிக வழியிலேயேதான் இவர்களும் போராட வேண்டுமா?
அதே மொழியைத் தான் இவர்களும் பயன்படுத்த வேண்டுமா..? அவரது தாயாரை பேசுவதும், நாயென்று இடித்துரைப்பதும், செருப்பை தூக்கி காட்டுவதும்... பொன்முடி பேசியது தவறான வார்த்தைகள் என்றால், நீங்கள் போராட்டத்தில் முழங்கிய வார்த்தைகள் எல்லாம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய அறிவார்ந்த வார்த்தைகளா? என பொது மக்கள் கேட்கிறார்கள்.
#WATCH | Chennai, Tamil Nadu: AIADMK women workers stage a protest against state minister K. Ponmudy's statement. pic.twitter.com/Mxa3dABwTG
— ANI (@ANI) April 16, 2025
இதையும் படிங்க: பொன்முடி போட்டோவிற்கு செருப்பு மாலை... பெண்களின் செயலால் பீதியான திமுக..!