×
 

நீட் தேர்வால் இன்னுயிர் நீத்த மாணவர்கள்..! மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுகவினர் அஞ்சலி..!

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என கண்டன குரல் வலுத்து வரும் நிலையில், மறுபுறம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சிப்பெற முடியாமல் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என பேசினாலும், தேர்வின் தோல்வியை தாங்க முடியாமல் இளம் தலைமுறைகள் உயிரை மாய்த்துக் கொள்வது வேதனையான விஷயம் தான்.

இந்த நிலையில், நீட் தேர்வு பயத்தால் 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதன் பேரில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: என்டிஏ கூட்டணியிலேயே நாங்க தான் மாஸ்... காலரைத் தூக்கி விடும் ஜி.கே.வாசன்...!

ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஒன்று கூடி கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்த 22 மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சேலம், நாமக்கல், கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து நீட் விலக்கின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதையும் படிங்க: கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல; கட்டிடத்தையே இடித்து கட்டுகிறவன்... சீமான் ஆவேசம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share