சென்னையில் விஜய்... மதுரையில் அஜித்... விழிபிதுங்கி நிற்கும் அப்பாவி மக்கள்...!
மதுரையில் அஜித் ரசிகர்கள் குட் பேட்அக்லி திரைப்பட கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுற்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேள தாளங்கள் முழங்க "கடவுளே அஜித்தே" என்ற கோசத்துடன் "குட் பேட்அக்லி " திரைப்படத்தை கொண்டாடி வரவேற்ற அஜித் ரசிகர்களால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மைத்ரி மூவி மேக்கர் தயாரிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் "Good bad ugly" குட் பேட் அக்லி திரைப்படம் இன்று காலை 9:30 மணியளவில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை திரிசா மற்றும் அர்ஜின் தாஸ் S.J. சூர்யா யோகி பாபு போன்று முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் மேலும் இந்த திரைப்படத்திற்கு G.V பிரகாஷ் இசையமைத்து 180 கோடி செலவில் படம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கிறது திமுக அரசு.. இபிஎஸ் காட்டம்..!
இந்த திரைப்படம் கொண்டாடும் வகையில் அதிகாலையில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் சோழவந்தான் தென்கரைப் பிரிவிலிருந்து "வி-சினிமாஸ்" திரையரங்கு வரை பட்டாசு வெடித்து மேல தாளங்களுடன் வண்ண பேப்பர் வெடி வெடித்து ஆட்டம் ஆடினர் மேலும் சிலர் இரு சக்கர வாகனத்தின் மீது ஏறி நின்று அலப்பறை செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரையில் அஜித் ரசிகர்களால் இப்படி மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறார்கள் என்றால், சென்னையில் விஜய் கட்சி ஆரம்பித்து அவரது தொண்டர்களால் ஏகப்பட்ட சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள். சமீபத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்க நாளான்று விஜய் தனது தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தை நடத்தியதால் திருவான்மியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இப்படி சென்னையில் விஜய் தொண்டர்களும், மதுரையில் அஜித் ரசிகர்களும் செய்யும் அட்ராசிட்டிகளால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவா..? அதிமுகவா..? நாடக அரசியல் நடத்தும் ராமதாஸ்..! வன்னியரசு ஆவேசம்