போட்டோவுக்கு 'NO' சொன்ன மனைவி..! பாறாங்கல்லால் தாக்கப்பட்ட கொடூரம்..!
பிக்னிக் சென்றபோது தன்னுடன் புகைப்படம் எடுக்க மறுத்த மனைவியை பாறாங்கல்லால் கணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அன்றாட நாட்களில் நாம் சுமக்கும் வேலை பளுவை குறைப்பதற்காக மற்றும் நம் குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதற்காக அனைவரும் சுற்றுலா செல்வோம். அங்கு மகிழ்ச்சியாக, நிம்மதியாக, மன அழுத்தத்தை குறைத்து கொள்வதற்காக பல இடங்களுக்கு சென்று கண்டுகளிப்போம்.
அப்படியாக ஒரு தம்பதி தங்களது விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக சுற்றுலா சென்றுள்ளனர். கணவன் தன் மனைவியோடு புகைப்படம் எடுக்க நினைத்தபோது அதனை மறுத்ததற்காக ஆத்திரத்தில் மனைவியை பாறாங்கல்லால் தாக்கிய கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க இந்தியர்களுக்கு சிக்கல்... இந்தியாவுக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை!!
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான ஹவாய் என்ற பகுதியை சேர்ந்தவர் கெர்ஹாட். மயக்க மருந்து நிபுணரான இவருக்கு ஏரியல் கோனிக் என்ற மனைவி உள்ளார். இவர் அணுசக்தி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கெர்ஹாட் மற்றும் ஏரியல் கோனிக் இருவரும் விடுமுறை என்பதால் சுற்றுலாவுக்காக ஓஹூ தீவுக்குச் சென்றுள்ளனர்.
இந்த சுற்றுலாவின் போது கெர்ஹாட் தனது மனைவியுடன் புகைப்படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் தன் கணவருடன் புகைப்படம் எடுக்க ஏரியல் கோனிக் மறுத்த நிலையில் அவர் ஆத்திரமடைந்துள்ளார். அப்போது, கெர்ஹாட், மனைவியை அடித்தும், பாறாங்கல்லால் தாக்கியும் கொடூரமாக துன்புறுத்தியுள்ளார். இதனை நேரில் பார்த்த 2 பேர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், முகம் மற்றும் தலையில் படுகாயத்துடன் இருந்த ஏரியல் கோனிக்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அடுத்து, மருத்துவராக உள்ள கெர்ஹாட் கோனிக்கை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. தொடர்ந்து மனைவியை தாக்கிய கெர்ஹாட்டை போலீசார் கைது செய்தனர்.போட்டோ எடுக்க மறுத்ததற்காக மனைவியை பாறாங்கல்லால் தாக்கிய சம்பவம் கேட்போரை கதிகலங்க செய்கிறது.
இதையும் படிங்க: ஈரான் வெளியிட்ட ஏவுகணை நகரம்.. அமெரிக்காவை எச்சரித்து வீடியோ வெளியீடு..!