×
 

தமிழக அரசியலை புரட்டிப்போடப் போகும் அமித் ஷா... இன்று இரவு மீட்டிங்; ட்விஸ்ட் வைக்கும் பாஜக!

அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என ஆரம்பம் முதலே விடாமல் வலைவீசி வருகிறது. 

தமிழக அரசியல் களத்தையே மாற்றக்கூடிய இரண்டு முக்கிய அறிவிப்புகள் நாளை வர வாய்ப்புருப்பதாக சொல்லப்படுகிறது.  சில குழப்பங்களுக்கு முடிவு கட்டுவதற்காக அமித்ஷா இன்று சென்னை வருவதாகவும,  இன்று இரவு நடக்க போகும் மீட்டிங் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க போவதாகவும் கூறப்படுகிறது.  அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என ஆரம்பம் முதலே விடாமல் வலைவீசி வருகிறது. 

 

பாஜக கூட்டணி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி போடும் கண்டிஷன்களுக்கெல்லாம் பாஜக இறங்கி வர தயாராக இருப்பதாக பேச்சு இருக்கிறது. அதிலும் அண்ணாமலை மாநில தலைவராக இருக்கும் வரை கூட்டணி கணக்குகள் ஒத்து வராது என்பதால் அண்ணாமலையை பதவியிலிருந்து தூக்கவும் பாஜக தலைமை ரெடியாக இருக்கிறது. அடுத்ததாக பாஜக மாநில தலைவர் யார் என்பதிலும் கட்சிக்குள் போட்டா போட்டி நடந்து வருகிறது. நயினார் நாகேந்திரன் கருப்பு முருகானந்தம் ரேசில் இருந்த நிலையில் தென்காசி மாவட்ட பாஜக தலைவரான ஆனந்தன் அய்யாச்சாமியும் போட்டிக்கு வந்துள்ளார். 

இதையும் படிங்க: காலரை தூக்கிவிட்டு கெத்தா வரப்போகும் நயினார் நாகேந்திரன்; டெல்லி பறந்ததன் பரபர பின்னணி...! 

பாஜக சீனியர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, கருப்பு முருகானந்தத்தையும் கைக்காட்டும் நிலையில் ட்விஸ்ட்டாக வேறு ஒருவரை தலைவர் பதவிக்கு கொண்டு வந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக முடிக்க திட்டமிட்டுள்ளது. டெல்லி தலைமை அதுவும் அண்ணாமலை கைக்காட்டும் நபரை தலைவராக்குவதை அதிமுகவும் விரும்பவில்லை. இப்படி தலைவர் பதவி மற்றும் ஆதிமுக கூட்டணி விவகாரம் இழுபறியில் இருப்பதால் அதற்கு முடிவு கட்டுவதற்குதான் இன்று சென்னை வருகிறார் அமைச்சர் அமித்ஷா. 

இன்று இரவே இரண்டு தரப்பிடமும் பேசி முடித்து நாளையே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புருப்பதாக சொல்கின்றனர். அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து இறங்கினால் மட்டுமே கூட்டணி சாத்தியமாகும் என்பதால், அடுத்த தலைவர் யார் என்ற அறிவிப்புடன் தான் அதிமுக கூட்டணி பற்றிய தகவலும் சேர்ந்தே வரும் என கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு பற்றிய டீலிங்கையும் கையோடு முடித்து விட வேண்டும் என கணக்கு போட்டுள்ளார் அமிஷா. அதனால் பேச்சு வார்த்தையில் அது பற்றிய விவாதங்களும் இருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ஹூரியத் பிரிவினைவாத அமைப்பிலிருந்து 3 அமைப்புகள் விலகல்.. மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share