×
 

வரும் 31 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை.. கண்காணிப்பு வளையத்துக்குள் குமரி..!

சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தரவுள்ளார்.

டெல்லியிலுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் சார்பாக சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், கடந்த மார்ச் 7 ஆம் தேதி இந்திய மேற்கு கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை வழியாக சைக்கிள் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது . இதில் 125 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜா ஆதித்ய சோழன் ஆர்.டி.சி.மையத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா...? காத்திருக்கும் விவசாயிகள்..!

'சுரக்ஷித் தட் சம்ருத் பாரத்" எனப்படும் பாதுகாப்பான கடல் வளம்...செழிப்பான இந்தியா... என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இந்த சைக்கிள் பேரணி விழிப்புணர்வு மட்டுமல்லாது தேசப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

வடக்கு தெற்கு என 2 மண்டலங்களாக நடக்கும் இந்த பேரணியின் நோக்கம் இந்தியாவின் கடற்பாதி பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு கடத்தல் போன்ற அபாயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது தான். 

 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கடந்து மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 553 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் வரும் 31- ஆம் தேதி பேரணியை நிறைவு செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 31- ஆம் தேதி கன்னியாகுமரி வருகை தர உள்ளார்.

இந்த நிலையில், நிறைவு நாள் நிகழ்ச்சி நடக்கும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை தென் மண்டல ஐ.ஜி. சரவணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கூடங்குளம் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் மாங்கா சவுத்ரி, உதவி கமாண்டர் அசீம் பரத்வாஜ், ஆய்வாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரூபாய் குறியீட்டை மாற்றிய விவகாரம்.. கர்நாடகத்திலிருந்து ஆதரவுக் குரல்.. அடிச்சித் தூக்கும் ஸ்டாலின்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share