×
 

முடிவெட்டியே கின்னஸ் சாதனை.. ஜப்பான் பாட்டிக்கு அடித்த ஜாக்பாட்!!

உலகின் மிகவும் வயதான முடித்திருத்தும் கலைஞரான மூதாட்டி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்து அசைத்தியுள்ளார்.

ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தின் நககாவா பகுதியை சேர்ந்தவர் ஹிட்சுய் ஹகோய்ஷி. இவர் தனியாக சலூடன் கடை வைத்து நாத்தி வருகிறார். தன்னுடைய 14 வயதில் டோக்கியோவுக்கு குடிப்பெயர்ந்த ஹிட்சுய், முடித்திருத்தும் பயிற்சி எடுத்து தனக்கு என சலூன் கடையை திறந்துள்ளார். அதாவது 1936ம் ஆண்டே முடித்திருத்தும் உரிமையை பெற்றிருந்த இந்த மூதாட்டி கணவன் உதவியால் சலூன் வைக்க முடிவெடுத்தார்.

சலூன் திறந்து நடத்தி வந்த போது துரதிர்ஷ்டவசமாக, அந்த சலூன் கடை மீது விமான தாக்குதல் நடந்தது. அதில் மிகுந்த பண கஷ்டத்தில் சிக்கிய ஹிட்சுய், மீண்டும் தனது சொந்த ஊரான நக்காவாவுக்கு வந்துள்ளார். அங்கு தனது இரு குழந்தைகளுடன் சலூன் தொழிலையை தொடங்கிய இவர் தொடர்ந்து அதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இதையும் படிங்க: மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை.. மாநகராட்சியின் அலட்சியத்தில் அரங்கேறியதாக குற்றச்சாட்டு!

இந்நிலையில், 90 ஆண்டுகளாக முடித்திருத்தும் பணியில் இருக்கும் ஹிட்சுய்க்கு தற்போது 108 வயது ஆகிறது. இவரது அயராது உழைப்புக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகிலேயே வயதான முடி திருத்தும் பெண் கலைஞர் என்ற உலக சாதனையை இந்த மூதாட்டி பெற்றுள்ளார்.

இதன் மூலம் அவருக்கு வாழ்த்துஅள் குவிந்து வருகிறது. 100 வயதை கடந்தும் வாழும் மூதாட்டி தனது ஆரோக்கியத்துக்கான சீக்ரெட்டை சொல்லியுள்ளார். அதாவது, தனது 70 வயதில் இருந்து தினமும் கடைப்பிடித்து வரும் உடற்பயிற்சியே தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இளைஞர்களை மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து சென்ற போலீஸ்... பாஜக எம்எல்ஏ கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share