அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு - பாஜக எடுத்த பரபரப்பு முடிவு...!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறார். அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்றும், அவர் மீது இதேபோல் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்கள் என்ற பெயரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருவதாகவும், இந்த பெண்ணில் சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை அம்பலப்படுத்தி திமுக அரசு கேலிக்குத்தாக்குள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
எனவே ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பொதுநல மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஞானசேகருடன் பேசிய திமுகவின் யார் அந்த சார்..? ஆதாரத்துடன் வெளியிடுவேன்… அண்ணாமலை சவால்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?
கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இவ்வழக்கில் அதேபகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றமும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.
இந்த விவகாரத்தில் திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன. இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தில்,சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கு : நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்!