×
 

திமுகவை வேரோடு அகற்றுவோம்… நயினார் நாகேந்திரன் பதவியேற்பில் அண்ணாமலை சூளுரை..!

ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர்  தேர்தல் முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் பாஜக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன்தவியேற்றுக் கொண்டார். முன்னாள் மாநிலத் தலைவர்  அண்ணாமலை அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். "எங்கள் இலக்கு மற்றும் பாதை எங்களுக்குத் தெரியும், வரவிருக்கும் 2026 தேர்தலில் வலுவான என்.டி.ஏ கூட்டணியுடன் இணைந்து திமுகவை தமிழ்நாட்டிலிருந்து வேரோடு அகற்றுவோம்" என்று அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலை 2021 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலையின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைவதால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பாஜக தலைமை மும்முரமாக ஈடுபட்டது.  தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பெயர்கள் விவாதிக்கப்பட்டு வந்தன. இதனிடையே,  நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு அழைத்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையும் படிங்க: இனி அடிக்கிறதெல்லாம் சிக்ஸர்தான்... அண்ணாமலையின் ஆக்ரோஷ அரசியல்... அடுத்த அதிரடிக்குத் தயார்..!

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் அதிகாரி சக்ரவர்த்தி வியாழக்கிழமை வெளியிட்டார். கட்சியின் அசல் உறுப்பினர்களாக 10 ஆண்டுகள் இருந்து 3 ஆண்டுகள் தீவிரமாகப் பணியாற்றியவர்கள் தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது. நயினார் நாகேந்திரன் பாஜகவில் 8 ஆண்டுகள் மட்டுமே இருந்ததால், தேர்தலில் போட்டியிடுவதில் அவருக்கு சிக்கல்கள் இருந்தன. இருப்பினும், தேர்தல் அதிகாரி சக்ரவர்த்தி, அவர் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், தேர்வு குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றும் கூறினார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நேற்று மாலை 4 மணி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, நயினார் நாகேந்திரன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாக இருந்தது. 

இதற்கிடையில், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர்  தேர்தல் முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அறிவிக்கப்பட்டன. தமிழக பாஜக மாநிலத் தலைவராக நைனார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற்கான சான்றிதழை நைனார் நாகேந்திரன் பெற்றுக்கொண்டார்.முன்னாள்  தலைவர் கே. அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்த அமித்ஷா... மைக்கை பிடிங்கி பேசிய அண்ணாமலை... என்ன சொன்னார் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share