காரணம் சொல்லி சொல்லி ..சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை
சொன்னது போலவே கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு அண்ணாமலை, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.
சொன்னது போலவே கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு அண்ணாமலை, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.
கோவையில் தனியார் ஹோட்டலில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில் அவர் எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன். தொண்டர்களும் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள், வீட்டு வாசலில் நின்றால் போதும். மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை. நடுத்தர மக்கள் வெளியில் வர வேண்டும். மீடியாவில் இதை விவாதிக்க வேண்டும். இதைப் பேச வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, சொன்னது போலவே, கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு அண்ணாமலை, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். 6 முறை எனக் கூறிய நிலையில், மொத்தம் 8 முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்து உடலை வருத்திக் கொண்டார்.
இதையும் படிங்க: ‘திருமா ஏன் இப்படி திமுகவின் கொத்தடிமை ஆனார்..?’- சிறுத்தையை கதறவிடும் அண்ணாமலை குரூப்..!
அண்ணாமலை 9ம் முறை அடிக்க முயன்றபோதுஆதரவாளர்கள் அவரைத் தடுத்த நிறுத்தினர். ஒவ்வொருமுறையும் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டபோது வெற்றிவேல் வீரவேல் என சுற்றி இருந்த ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.
இதையும் படிங்க: ஏதே... சில்லித்தனமான வேலையா..? திமுக மறுப்பை சல்லி சல்லியாய் உடைத்த அண்ணாமலை..!