×
 

ஆடியோ லீக்-ஆடிப்போன புஸ்ஸி..! விஜய் எடுக்கும் அடுத்த முடிவு என்ன?

இதுகுறித்து மாவட்டப் பெறுப்பாளர்களை சந்தித்து புஸ்ஸு ஆனந்த் தனித்தனியாக விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

விஜயை தாண்டி தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்புஸ்ஸி ஆனந்த் என்கிற முழக்கம் இப்போது வெளிப்படையாகவே பேசப்படுகிறது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து, விஜய்யின் ஆலோசகராகவும், தவெக தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் நிழலாக செயல்பட்டு வரும்புஸ்ஸி ஆனந்த் குறித்து ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அந்த ஆடியோவில், ‘‘விஜய் தான் கட்சியின் முகம். ஆனால் கட்சியின் எந்த நிகழ்ச்சி போஸ்டர்களிலும் ஆனந்த் புகைப்படம் தான் பெரிதாக இருக்கிறது. அவர் அங்கீகரிக்காமல் ஒரு புள்ளிக்கூட வைக்க முடியாது. விஜயை அமுக்கிவிட்டு அவர் பெரிதளவில் காட்டிக்கொள்கிறார். ஸ்டாலினை விட துரைமுருகனையோ, ஜெயலலிதாவை விட சசிகலாவையோ பெரிதுப்படுத்தி மக்களிடம் கொண்டுசென்றால் கட்சி என்னவாகும்? அதுபோல தான். எல்லா கட்சியிலும் முதல்வர் வேட்பாளரோ, கட்சியின் தலைவரோ தான் முன்னிலை.

விஜய்யே பிறந்தநாள் கொண்டாடவில்லை. ஆனால் ஆனந்த் பிறந்தநாள் கொண்டாடுகிறார். நான் ராமதாஸையே வெளியே போட்டவன். முதல்வர் வேட்பாளர் அன்புமணி என்றால் அவர்தான் இருக்க வேண்டும். நான் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, அண்ணாதுரைக்கு நிகராக விஜயை காண்பிக்க முற்படுகிறேன். ஆனால் கோமாளிக்கூட்டங்களை எல்லாம் உள்ளே கொண்டு வருகிறார். இது பெரிய தப்பு. இப்படியே போச்சுனா 2 சதவீதம் கூட தேறாது.

இதையும் படிங்க: ஆடியோ லீக் விவகாரம்; மாவட்ட நிர்வாகிகளிடம் உண்மையை உடைத்துக் கூறிய புஸ்ஸி ஆனந்த்!

முதல்வர் வேட்பாளர் முகத்தை நீர்த்துப்போக செய்யக்கூடாது. அவரது இடத்தை ஆக்கிரமிக்க கூடாது. திமுக, அதிமுக.,வை விடுங்க, லெட்டர் பேட் கட்சிகளில் கூட இதெல்லாம் விட மாட்டார்கள். ஜெயலலிதா, கருணாநிதி, அண்ணாதுரை, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை பார்த்துதான் ஓட்டுப்போடுகின்றனர். இதுபோல அனைவருக்கும் நடுநிலையானவர் யாரோ அவரை தான் முன்னிலைப்படுத்த வேண்டும். இதனால் தான் இபிஎஸ் காலியானார். இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா, அன்புமணி, திருமாவளவன் என யாரையும் இப்படி முன்னிலைப்படுத்த முடியாது.

ஆனால், தவெக.,வில் முன்னிலைப்படுத்த வேண்டிய விஜயை விட ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்துகிறார். இவர் தமிழகத்திற்கு என்ன செய்தார்? அவருடைய பிறந்தநாளுக்கு ஏன் தொண்டர்கள் கிடா வெட்டி, ரத்த தானம் கொடுக்கின்றனர்? அப்படியென்றால், விஜயை ஒரு 'முகத்திற்காக' மட்டுமே வைத்துள்ளனர் என்றும், ஆனந்த் தான் எல்லாமே எனவும் நினைக்கின்றனர். கமல் கூட கொள்கை இல்லாமல் 4 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால், இந்த கட்சி 2 சதவீதம் கூட தேறாது. நான் 30 சதவீதத்திற்கு இலக்கு வைத்துள்ளேன். அப்போது தான் கூட்டணி பகிர்வுக்கு வருவார்கள். இப்படியிருந்தால் யார் கூட்டணிக்கு வருவார்கள்?

விஜயிடம் என்ன சொன்னாலும் அதை ஆனந்திடம் சொல்லிவிடுகிறார். அவரும் இரவு நேரத்தில் விஜயிடம் இருந்து எப்படி தகவல்களை பெறுவது என்ற பார்முலாவை ஆனந்த் கண்டறிந்துள்ளார். கட்சி விஷயங்கள் பேசுவது போன்று பேசி, எல்லா விஷயங்களையும் விஜயிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார். நான் விஜயிடம் என்ன சொன்னாலும் அப்படியே அவருக்கு தெரிகிறது. அதனால் இனி ஆனந்திடமே நேரடியாக சொல்லிவிடலாம் என முடிவு செய்தேன்.

மாவட்ட தலைவர்களை நியமிப்பது தொடர்பாகவும் ஆனந்த் தலையிடுகிறார். விஜய் வேண்டாம், தவறாக போய்விடும் என சொன்னாலும், வேட்பாளர்களை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறிவிடுகிறார். கட்சி நிர்வாகி வேட்பாளராக இருந்தாலும், ஆனந்த் சொன்னால் தான் உங்களுக்காக கட்சி வேலை செய்வார்கள். இந்த மாதிரியான கட்சிக்குள் நிலவும் அரசியல் நெருங்கி வரவர, தாங்க முடியாத அளவிற்கு சென்றுவிடும்’’ என அந்த ஆடியோவில் ஜான் பேசியுள்ளார். இதன் மூலம் புஸ்ஸி ஆனந்துக்கு  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டப் பெறுப்பாளர்களை சந்தித்து புஸ்ஸு ஆனந்த் தனித்தனியாக விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ஆப்சென்ட் ஆன விஜய்... புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share