×
 

5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி! ராமர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 400 கோடி வரி செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகமானது, சுமார் 300 கோடி ஆண்டுகள் பழைமையான பாறையில் இருந்து வடிக்கப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மைசூர் மாவட்டத்தில் உள்ள குக்கே கவுடனாபுராவில் செயல்படும் குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறையின் மூலம் இந்த ராமர் விக்ரகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சேதம் அடையாதபடிக்கு நாகரா கட்டடக் கலையின் மூலம் இண்டெர் லாக்கிங் முறையில் கட்டப்பட்டிருக்கிறது இந்த ராமர் கோவில்

இதையும் படிங்க: ‘நாங்கள் அப்பாவி..! குஜராத் கலவரம் தொடர்பாக தவறான கதைகள் பரப்பப்பட்டன’.. பிரமதர் மோடி ஓபன்டாக்..!

இப்படியாக பல சிறப்புகளை பெற்ற அயோத்தி ராமர் கோவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்து, ஒரு முக்கிய மத சுற்றுலா தலமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 16 கோடி பார்வையாளர்களைப் பதிவு செய்துள்ளது. மகா கும்பமேளாவின் போது, 1.26 கோடி மக்கள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர். இது உள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய பொருளாதாரத்தை உயர்த்தியது.

இதனிடியே, 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுமானத்தை மேற்பார்வையிட 2020 ஆம் ஆண்டு ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 முதல் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 வரையிலான காலகட்டத்தில், 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரியை ராம ஜென்மபூமி அறக்கட்டளை செலுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். இதில், ரூ.270 கோடி ஜிஎஸ்டி வரியாக செலுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது என்றும் இது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது எனவும் மகிழ்ச்சி படக் கூறினார். மகா கும்பமேளாவின் போது 1.26 கோடி பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்தனர் என்று தெரிவித்த அவர், கடந்த ஆண்டு அயோத்திக்கு 16 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அதில் 5 கோடி பேர் ராமர் கோயிலுக்கு வருகை தந்தனர் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் நாளை பூமிக்கு திரும்புகிறார்கள்.. நாசா அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share