×
 

பத்ரிநாத் மலையில் பனிச்சரிவு.. 10 பேர் மீட்பு... சிக்கிய கட்டுமான ஊழியர்களின் நிலை என்ன..?

பத்ரிநாத் பகுதியில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவில் கட்டுமானப் பிரிவு ஊழியர்கள் 47 பேர் சிக்கியுள்ளனர். இதுவரை 10 பேர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இன்று கடுமையான பனிப்பொழிவு இருந்ததையடுத்து, இந்தப் பனிச்சரிவுதிடீரென ஏற்பட்டது. இந்த சம்பவம் மானா மற்றும் கஸ்தோனி ஆகிய பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது.

காவல் தலைமை அலுவலகத்தின் ஐஜி நிலேஷ் ஆனந்த் பார்னே செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ மானா எல்லைப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. அங்கு சாலை சீரமைப்புப் பணியில் இருந்த கட்டுமான ஊழியர்கள் 47 பேர் பனிச்சரிவில் சிக்கியுள்ளனர். இதுவரை 10 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

எல்லை சாலை அமைப்பின் பொறியாளர் சிஆர் மீனா கூறுகையில் “ பனிச்சரிவு நடந்த பகுதிக்கு 5 ஆம்புலன்ஸ்கள் அனுப்புப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவு இருப்பதால், மீட்புப்பணி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கத்தி கூப்பிட்டாலும் ரெஸ்பான்ஸ் இல்லை.. 2 நாட்களாக தொடரும் மீட்பு பணிகள்.. சுரங்கத்தில் சிக்கிய 8 பேரில் நிலை என்ன?

பனிச்சரிவில் 47தொழிலாளர்கள் சிக்கியிருப்பது தெரிந்தவுடன், மூத்த நிர்வாகிகள், எல்லை சாலை அமைப்பு பொறியாளர்கள், உயர்அதிகாரிகள், மீட்புப்படையினர், போலீஸார் சம்பவ இடத்துக்குவிரைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றாலும், அங்கு பனிப்பொழிவு குறையாமல் இருந்து வருகிறது.

சாமாலோ மாவட்ட ஆட்சியர் சந்தீப் திவாரி கூறுகையில் “ பனிச்சரிவு ஏற்பட்டுள்ளத் தகவல் கிடைத்தது, 57 கட்டுமானத் தொழிலாளர்கள் பனிச்சரிவுக்குள் சிக்கியுள்ளனர் இதில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணிக்குச் சென்றுள்ளனர். 

ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். செயற்கைக்கோள் தொலைபேசி உள்ளிட்ட நவீன சாதனங்களும் அந்த இடத்தில் பயன்படுத்த முடியாது. அந்த சாதனங்களும் தற்போது இல்லை. இதனால் தெளிவான தகவல் தொடர்பை அங்கு இருப்போரிடம் ஏற்படுத்த முடியவில்லை. எந்த உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் இல்லை, உயர் அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவும் வழங்குவோம், மீட்புப்பணி பாதுகாப்பாக நடக்கிறது என நம்புவோம்” எனத் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பனிச்சரிவில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வர வேண்டும் என்று இறைவன் பத்ரி விஷாலிடம் பிரார்த்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க: என்ன வேலை பார்த்தீங்க..! பீதியில் அரசு ஊழியர்கள்..! 48 மணி நேர கெடு விதித்த எலான் மஸ்க்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share