×
 

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. எஸ்.ஐ-யின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் கொலை வழக்கில் கைதான எஸ்ஐ ரகு கணேசன்னின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன்  பென்னிக்ஸ் கடந்த 2020ம் ஆண்டு காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.  

இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்டப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கை சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி இன்பச் சுற்றுலா - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்கள்

இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், மனுவை தள்ளுபடி செய்தும் கீழமை நீதிமன்றம் 2 மாதங்களில் விசாரணை முடிக்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ரமலான் எதிரொலி.. மணப்பாறை ஆட்டு சந்தையில் ஆடுகள் வரத்து குறைவு.. ஆயிரம் ரூபாய் விலை போன ஆடுகள்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share