எடப்பாடி முன்பிருக்கும் 2 ஆப்ஷன்... அமித் ஷா போட்ட கன்டிஷன்... ஏற்குமா அதிமுக?
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையிலான தனிப்பட்ட சந்திப்பின் போது 2 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமைச்சாவை சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று திடீர் என டெல்லி புறப்பட்டுச் சென்றார். அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரும் டெல்லி விரைந்தனர்.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே இந்த பயணம் என கூறப்பட்ட நிலையில், டெல்லியில் அண்மையில் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை காண வந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். யாரையும் சந்திக்க டெல்லிக்கு வரவில்லை எனக் கூறிய அடுத்த சில மணி நேரங்களிலேயே பாஜக மூத்த தலைவரான அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருடன் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்பி வேலுமணி, தம்பிதுரை, சிவி சண்முகம் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: மெகா NDA கூட்டணி அமைகிறது...எடப்பாடி மன மாற்றத்தின் பின்னணியில் நடந்தது என்ன? அட இந்த கட்சிகள் எல்லாம் வருகிறதா?
அமித் ஷாவுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது, அதுமட்டும் இன்றி மற்ற நிர்வாகிகளை வெளியே அனுப்பிவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் மட்டும் அமித் ஷா சுமார் 15 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது அமித் ஷா எடப்பாடி பழனிசாமிக்கு 2 ஆப்ஷன்களைக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்ட - ஒழுங்கு பிரச்சனையால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
திமுகவின் கூட்டணியிலும் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் அதிமுகவை கூட்டணியில் சேர்ந்தால் பாஜக தமிழகத்தில் அதிக அளவிலான எம்.எல்.ஏ.க்களை வென்றிடுக்க முடியும் என்பதை அமித் ஷா எடுத்துரைத்ததாக தெரிகிறது. எங்களுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக மார்ச் 31ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மற்றொரு ஆப்ஷன் என்னவென்றால், ஒன்றிணைந்த அதிமுக. அதாவது அதிமுகவில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சேர்ப்பதற்கு பதிலாக அவர்கள் பாஜக கூட்டணியுடன் நீடிப்பார்கள். நீங்கள் தனியாக பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என்ற ஆப்ஷனும் எடப்பாடி பழனிசாமி முன்புவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு ஆப்ஷன்களில் எடப்பாடி பழனிசாமி எதற்கு ஒத்துப்போவார் என அரசியல் வட்டாரங்கள் பரபரப்புடன் காத்திருக்கின்றன.
இதையும் படிங்க: விட்றா வண்டியை டெல்லிக்கு... விஜய் கொடுத்த மெசெஜ்... ரூட்டை மாற்றிய எடப்பாடி!