×
 

மீண்டும் டெல்லி செல்லும் அண்ணாமலை... கசிந்தது பரபர காரணம்...!

தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலை மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலை மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், பாஜக மாநிலத் தலைவர் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த வாரம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்தார். இந்நிலையில் அண்ணாமலை மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்தும் அதிமுக உடனான கூட்டணி தொடர்பாக பேச இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லியில் வரும் ஏழாம் தேதி பாஜகவின் தேசிய மையக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அப்போது புதிய தலைவர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 ஆண்டுகளாக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகித்ததில் தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாக தலைமை எண்ணுகிறதாம். மேலும் அண்ணாமலையே மீண்டும் மாநிலத் தலைவராக நீடிக்க வேண்டும் என தமிழக பாஜக தொண்டர்கள் விரும்புவதாகவும் டெல்லி தலைமைக்கு ரிப்போர்ட் கிடைத்துள்ளது. ஆனால் அண்ணாமலை பதவி விலகுவதில் குறியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவே அண்ணாமலை மீண்டும் டெல்லி செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

இதையும் படிங்க: அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து நீக்கமா.? பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் விளக்கம்!!

 இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் அண்ணாமலை மாநிலத் தலைவராக தொடர வேண்டும் என்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். சிவகங்கையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே அமித் ஷா, அண்ணாமலையிடம் அதிமுகவுடனான கூட்டணி முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின. பொதுவெளியில் அதிமுகவையோ, அதன் தலைவர்களையோ விமர்சிக்கக்கூடாது என ஸ்ட்ரிட்டாக கன்டிஷன் போட்டது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னிடம் ஒருமுறை கூட கலந்தாலோசிக்காமல் எடப்பாடி சொன்ன விஷயங்களை மட்டுமே கொண்டு அமித் ஷா கண்டித்தததும் அண்ணாமலையை விரக்தியின் உச்சத்திற்கு தள்ளியதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து டெல்லிக்கு வரவழைக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதாவது எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்றியது போலவும் ஆகிவிடும், 3 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்ததாகவும் அமைந்துவிடும் என டெல்லி தலைமை நினைக்கிறதாம். கூடுதலாக தமிழ்நாட்டில் அண்ணாமலைக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி வர உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்களாம். ப்படி பல தரப்பட்ட காரணங்கள் குறித்து விரிவாக விவாதிக்கவே அண்ணாமலை மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கே ஒரு கும்புடு... கமலாலயத்தைக் காலி செய்யும் அண்ணாமலை...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share