முடிஞ்சா அங்கப்போய் தொட்டுப் பார்... திமுகவினருக்கு நேரடி சவால் விட்ட அண்ணாமலை...!
திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் குழந்தைகள் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு மட்டும் ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் குழந்தைகள் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு மட்டும் ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மும்மொழி கொள்கைக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் ரயில் நிலை பெயர் பலகை உட்பட எங்கெல்லாம் இந்தி எழுதப்பட்டிருக்கின்றதோ, அவற்றையெல்லாம் கருப்பு மைப்பூசி அழிக்கும் போராட்டத்திலே திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில், அதனை விமர்சிக்கும் வகையிலே தற்பொழுது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த பதிவினை வெளியிட்டு இருக்கின்றார்.
பல ஆண்டுகாலமாக தமிழகத்தில் செய்து வரக்கூடிய அதே மொழி அரசியலை தற்பொழுது மொத்த ஆட்சி நிர்வாகமும் தோல்வி அடைந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் மடை மாற்றக்கூடிய வகையில் மீண்டும் கையில் எடுத்திருக்கின்றது திமுக என்று குறிப்பிட்டிருக்கக்கூடிய, அண்ணாமலை கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் திரியக்கூடிய திமுக கும்பல் அப்படியே அமலாக்கத்துறை இயக்குனரகம், வருமானவரி துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்று தான் பணிவன்புடன் கேட்டுக்கொள்வதாக பதிவிட்டு இருக்கின்றார்.
இதையும் படிங்க: ED, income tax, போர்டுல கருப்பு பெயிண்ட் அடிக்க சொல்லுங்க பார்க்கலாம்..! திமுக மீது அண்ணாமலை அட்டாக்..!
அந்த அலுவலகங்களுடைய முகவரிகளை அடிக்கடி அங்கு செல்லக்கூடிய திமுகவின் ஊழல் அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் கடும் விமர்சனத்தை அண்ணாமலை முன்வைத்திருக்கின்றார். மேலும் திமுகவின் போலி அரசியலுக்கு பலியானவர்கள் என்று குறிப்பிட்டு மொழிப்போர் தியாகிகள் பலர் திமுகவில் உயிரிழந்திருக்கின்றார்கள் அவர்களுடைய பெயரை எல்லாம் இன்றைய முதலமைச்சருக்கோ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கோ தெரியுமா என்று கேட்டிருக்கக்கூடிய அண்ணாமலை, அந்த குடும்பங்கள் அதாவது மொழிப்போரில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுடைய குடும்பங்கள் தற்பொழுது எப்படி எங்கே இருக்கின்றார்கள் என்ற விவரம் திமுகவினருக்கு தெரியுமா? என்று கேட்டிருப்பதுடன் திமுகவில் மேல்மட்ட அதிகாரங்களில் இருந்தவர்கள் யாராவது ஒருவர் மொழிப்போட்டியாகி ஆகி இருக்கின்றாரா என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
திமுக அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை தங்கள் குழந்தைகளை மூன்று மொழிகள் அல்லது பிற மொழிகள் அதாவது சர்வதேச மொழிகளை கற்பிக்கக்கூடிய கல்விநிலையங்களில் பயில வைத்துவிட்டு, தனியார் பள்ளிகளில் படிக்கக்கூடிய வசதியான குடும்ப குழந்தைகளுக்கு மட்டும் அந்த மொழி உரிமையை வழங்குவது சரியா என்றும் கேட்டிருக்கின்றார்.
இதையும் படிங்க: மலைப்பாதையில் சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்.. கொடுத்த நிதி என்னாச்சு? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!