×
 

தமிழக அரசை கண்டித்து ஊர்வலமாக சென்ற பாஜகவினர் கைது..!

கருரில் ஆயிரம் கோடி ஊழல் தமிழக அரசை கண்டித்து ஊர்வலமாக டாஸ்மாக் கடையை நோக்கி சென்ற பாஜகவினர் கைது.

கரூர் ,தோகைமலை பகுதியில் டாஸ்மாக் கடையில் முதல்வரின் படத்தை ஒட்டுவதற்காக  தண்டோரா அடித்துக்கொண்டு ஆயிரம் கோடி ஊழல் தமிழக அரசை கண்டித்து ஊர்வலமாக டாஸ்மாக் கடையை நோக்கி சென்ற பாஜகவினர் கைது.

கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.  தோகைமலை பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார் தலைமையில் சென்ற பாஜக நிர்வாகிகள் தண்டோரா  அடித்துக்கொண்டு திராவிட மாடல் அரசாங்கத்தில் குடிக்கிற சரக்கில் ஊழல் ஆயிரம் கோடி, ஊழல் செய்த நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்தை ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் உள்ளது.

இதையும் படிங்க: கனிமவளம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற லாரி.. இரண்டாவது நாளாக பொதுமக்கள் போராட்டம்..

அதேபோல டாஸ்மாக் கடைகள் முன்பாக ஸ்டாலின் புகைப்படத்தை வைப்பதற்கு காவல்துறை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தண்டோரா மூலமாக தெரிவித்து தமிழக அரசை கண்டித்து ஊர்வலமாக டாஸ்மாக் கடையை நோக்கி சென்ற பாஜகவினர் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

இதையும் படிங்க: கோரிக்கைகளை நிறைவேற்றவிட்டால் விரைவில் போராட்டம்.. வேல்முருகன் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share