அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதும் பர்வேஷ் வர்மா: ஆம் ஆத்மியை முந்திய பாஜக... வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி பர்வேஷ் வர்மா பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
டெல்லி சட்டசபை தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட இருக்கிறது.
ஆனால் அதற்கு முன்பாகவே ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கி விட்டன.
பாஜக சார்பில் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தற்போதைய 4 எம்எல்ஏக்கள், 2 முன்னாள் எம்பிக்கள், மற்றும் 8 முன்னாள் எம்எல்ஏக்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: ரயில், விமானம், சாலை போக்குவரத்து பாதிப்பு
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான முன்னாள் டெல்லி முதல் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில், மேற்கு டெல்லி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்பி ஆன பர்வேஷ் வர்மா இந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர்.
முதல்வர் அதிஷிக்கு எதிராக, தெற்கு டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதுரி களம் காண்கிறார்.
டெல்லியின் 4 முன்னாள் அமைச்சர்களான கைலாஷ் கெலாட், ராஜ்குமார் (இவர்கள் இருவரும் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சரவையில் பணிபுரிந்தவர்கள்) அரவிந்தர் சிங் லவ்லி, ராஜ்குமார் சவுகான் (இவர்கள் இருவரும் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தவர்கள்) ஆகியோருக்கும் இந்த தேர்தலில் 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக வெற்றி பெற்ற பாஜ்பாய், பின்னர் கட்சி தாவி 2020 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்...
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு இது ஒரு அவமானம் இல்லையா..? வார்த்தையில் வறுத்தெடுத்த வானதி..!