அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழப்பு... சேகர் பாபுவுக்கு வானதி சீனிவாசன் போட்ட கிடுக்குப்பிடி...!
கோவில்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்தார்.
கோவில்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்தார்.
இன்று சட்டப்பேரவையில் வினாக்களுடைய நேரம் முடிந்ததன் பிறகு, கோயில்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மீது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்தார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் உயிரிழப்பை தடுக்க வரும் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.
இதையும் படிங்க: பொசுக்கென சிரித்த வானதி ஸ்ரீனிவாசன்... டைமிங்கில் அடித்த தங்கம் தென்னரசு... சட்டப்பேரவையில் “கலகல”
பழனி, திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்களில் உயிரிழப்பு ஏற்பட்டதை சுட்டிக்காட்டி கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக அங்கு நெரிச்சல் ஏற்படுகிறது. அதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி இருப்பதாக கூறி கவன இருப்பு தீர்மானத்தை வான சீனிவாசன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள்.
பழனி ராமேஸ்வரம் திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு விபத்து காரணம் அல்ல என சேகர் பாபு விளக்கம் அளித்தார். உடல்நலக்குறைவு மட்டுமே உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்த அமைச்சர், இரண்டு கோயில்களில் மட்டுமே இருந்த மருத்துவ வசதியை ஏழு கோயில்களில் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் இதுவரை 7 லட்சத்து 16 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று இருப்பதாக சட்டப்பேரவையில் புள்ளி விவரங்களை வெளியிட்டார். தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கை 25% அதிகரித்து இருப்பதாகவும், கோயில்களுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பில் வரும் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடஇந்திய பெண்கள் பற்றி அருவருப்பான சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேளுங்கள் துரைமுருகன்.. வானதி சீனிவாசன் ஆவேசம்!