ஈரோடு கிழக்குத் தொகுதியில் பூத் சிலிப் விநியோகம் தொடக்கம்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி அவர் இயற்கை எய்தினார்.
காலியான அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 8-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தன. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். ஆளுங்கட்சி சார்பில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் சலசலப்பு: பீகார் சட்டசபை தேர்தல் விவகாரத்தில், மத்திய அமைச்சர் போர்க்கொடி
ஈரோடு மரப்பாலம், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடந்த 25-ந் தேதி சீமான் பிரசாரம் மேற்கொண்ட போது திமுக அரசை கடுமையாக சாடினார். இதனிடையே உரிய அனுமதி பெறாமல் பிரசாரம் மேற்கொண்டதாகவும், பேனர்கள், பிளக்ஸ்கள் வைத்ததாகவும் கூறி சீமான் மீது 4 வழக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி மீது 6 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
இதனிடையே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகிக்கும் பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரி தொடங்கி உள்ளார். இதற்காக வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப்களை அங்கன்வாடி பணியாளர்கள் கொடுத்து வருகின்றனர். எந்த வாக்குச்சாவடியில், எந்த வரிசையில் வாக்களிக்க வேண்டும் என்பன போன்ற விவரங்கள் தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ள பூத் சிலிப்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16 ஆயிரம் கோடி நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள்: "பறிமுதல் செய்யும்படி", உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு