பந்தயம் கட்டிய காளை உரிமையாளர்.. பறிபோன மாணவரின் உயிர்..
தஞ்சையில் ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ். இவரது மகன் தீரன் பெனடிக் வல்லம் அரசு ஆண்களை மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த தீரன், பண்ணை அருகே நின்று கொண்டிருந்த காளையைப் பிடிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது தீரனின் மார்பில் காளை அதிவேகமாக குத்தியுள்ளது. இதில் தீரன் பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்த தீரனை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தீரன் செல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தீரனின் உறவினர்கள் கூறுகையில், அந்தப் பகுதியில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை அடக்கினால் 200 ரூபாய் தருவதாக பந்தயம் கட்டுவதாக குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: நகை வியாபாரியை ரவுண்டு கட்டிய கொள்ளையர்கள்.. பறிபோன 1கோடியே 10 லட்சம் ரொக்க பணம்!
இதனால் ஏராளமான மாணவர்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர். மேலும் தற்போது மாணவன் வீரனின் உயிரிழப்புக்கு காரணமான ஜல்லிக்கட்டு காளை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்றும் இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 2035-க்குள் வல்லரசாக மாற்றம்..? பாதுகாப்பு பட்ஜெட் 7.2% அதிகரிப்பு: எதிரி நாடுகளை மிரட்ட சீனா நாடகம்..?